Load Image
dinamalar telegram
Advertisement

பெரியாறு அணை 136 அடியை எட்டியது :ரூல்கர்வ் நடைமுறையால் 142க்கு சிக்கல்

கூடலுார்:பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று இரவு 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் நடைமுறையால் 142 அடி வரை தற்போது தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரம் அதி தீவிர மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அணைக்கு நீர்வரத்து ஒரு வாரமாக 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தாண்டவில்லை.

மழை சற்று தீவிரமடைந்ததால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரிக்கத் துவங்கியது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி 2831 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 3:00 மணிக்கு 6143 கன அடியாக அதிகரித்தது.

இதனால் காலை 135.15 அடியாக இருந்த நீர்மட்டம் மாலை 5:00 மணிக்கு 135.80 அடியாக உயர்ந்தது. இரவு 7:00 மணிக்கு 136 அடி எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு குடிநீர், முதல் போக நெல் சாகுபடிக்காக 1893 கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6067 மில்லியன் கனஅடி. தேக்கடியில் 39.6 மி.மீ., பெரியாறில் 39.2 மி.மீ., மழை பதிவானது. நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில் தொடர்ந்து மழை பெய்தாலும் ரூல்கர்வ் நடைமுறையால் நீர்மட்டம் 142 அடி தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரூல் கர்வ்





அணையில் 142 அடி தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதிலும், மத்திய நீர்வள கமிட்டியால் அமல்படுத்தப்பட்டிருக்கும் ரூல்கர்வ் விதிமுறைப்படி கீழ்கண்டவாறு தண்ணீர் தேக்க முடியும்:

ஜூலை 10 முதல் 19 வரை 136.30 அடியாகவும், ஜூலை 20 முதல் 31 வரை 137 அடியாகவும், ஆகஸ்ட் 10 வரை 137.50 அடியாகவும், ஆகஸ்ட் 20 வரை 138.40 அடியாகவும், ஆகஸ்ட் 31 வரை 139.80 அடியாகவும், செப்டம்பர் 10 வரை 140.90 அடியாகவும் தேக்கலாம். செப்டம்பர் 11 ல் இருந்து 20 வரை மட்டுமே நீர்மட்டம் 142 அடியாக தேக்க முடியும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement