சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி, அமலாக்கத்துறை விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (15)
அனிதா ராதாகிருஷ்ணன், நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். விசாரணை தொடரத்தானே அனுமதி கொடுத்துள்ளார்கள். நடவடிக்கை எடுக்க இல்லையே? அப்படியே அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு இன்னும் நாற்பது வருடம் ஆகும். அதுனால, நீங்கள் கவலைப்படாமல் ஊழலை தொடர்ந்து செய்யுங்கள்.
ஸ்டாலினுக்கு இப்போது புரிந்து இருக்கும் என்று நினைப்போம். இது போல் குற்றம் உள்ள மந்திரிகளை தீர்ப்பு வருவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய ஆட்களை போடுங்கள். குற்றம் உள்ளவர்கள் தன மீது குற்றம் இல்லை என்று நிரூபித்து விட்டு திரும்பி வந்தால் பதவி கொடுங்கள். இல்லை என்றால் ஆட்சிக்கும் கட்சிக்கும் கேட்ட பெயர் . அடுத்த தேர்தலில் மொத்தமாக வீட்டுக்கு போக வேண்டியது தான்.
கடந்த சில வாரங்களாக இந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் overtime செய்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஊழலோ ஊழல். நாடு முழுவதும் சோதனை.
கூடுதல் சொத்துக்களை அனிதா அரசுக்குத் திருப்பிக்கொடுத்துவிட்டால் செந்தில் பாலாஜி போல விடுதலை😛 கிடைக்குமா?
சதியா இருக்குமோ ஆதிமூக்காவில் இருந்து வந்த ஆட்களுக்கு ஆப்பு வைக்க உல் குதோ