Load Image
Advertisement

முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்க கூடாது: முதல்வர் ஸ்டாலின்

 முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்க கூடாது: முதல்வர் ஸ்டாலின்
ADVERTISEMENT
சென்னை: போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் கனமழை பெய்துவரும் 14 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். அதில், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Latest Tamil News
ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: போதிய முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் அளவை அதிகரிக்கக் கூடாது. இரவு நேரத்தில் தண்ணீர் அளவை வெளியேற்றத்தை அதிகப்படுத்துவதை தடுக்க வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களையும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூட வேண்டும். உடனடியாக அவற்றை சேமிப்பு கிடங்குகளில் மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (22)

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    அணைகள் திறக்கப்படுவது என்னான்னு தெரிஞ்சுக்காமே சொல்றாரு ??

  • Bhaskar Srinivasan - Trichy,இந்தியா

    2005 சென்னை வெள்ளதிற்கு பிறகு, வெள்ள நீர் வெளியேறுவதை தீமுக அரசியல் செய்து வருகிறது, இது நலத்திற்கு அல்ல. நீர் பிடிப்பு பகுதியில் பேயும் மழை மற்றும் அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையின் பாதுகாப்பு கருதி அணை பாதுகாப்பு வல்லுநர்கள் எடுக்க வேண்டிய முடிவு. இதில் அரசியல் தலையீடு வேண்டாம். அணை பாதுகாப்பிற்கு தீங்கு நேர்ந்தால் அது மாபெரும் சோகமாக முடியம் .

  • Bhaskar Srinivasan - Trichy,இந்தியா

    200

  • Mohan - Thanjavur ,இந்தியா

    நெல் மூட்டை மழையில் நனைவதும், பின்னர் அத்துறை சார்ந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதும் கலக வாடிக்கை. நெல்மணிகளை பாதுகாக்க பணம் இல்லை. ஆனா, வீணா போன மூணா கானா பேனா வுக்கு...

  • Soumya - Trichy,இந்தியா

    விடியல் ஐயா இப்பவே குழு அமைத்தால் தானே அடுத்த வருஷ வெள்ளத்துக்கு செயல்படும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்