Load Image
dinamalar telegram
Advertisement

மோடியைக் கண்டு பயமில்லை: ராகுல்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். பிரதமர் மோடியைக் கண்டு பயமில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை காங்., இடைக்கால தலைவர் சோனியா மற்றும் எம்.பி., ராகுல் இயக்குநர்களாக உள்ள 'யங் இந்தியன்' நிறுவனம் வாங்கியது. இதில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்தது. இந்நிலையில், புதுடில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தலைமையகம் மற்றும் அது தொடர்புடைய 11 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை பநடத்தினர். சோனியா மற்றும் ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த சென்றனர். அவர்கள் தரப்பில் யாரும் இல்லாததால் 'ஆதாரங்களை பாதுகாப்பதற்காக' அலுவலகத்துக்கு தற்காலிகமாக சீல் வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest Tamil Newsஇந்நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கை தொடர்பாக ராகுல் அளித்த பேட்டி: நாங்கள் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம். பிரதமர் மோடியை கண்டு பயப்படமாட்டோம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு, சமூக நல்லிணக்கத்திற்கு உதவும் பணியை தொடர்வோம். அவர்கள் என்ன செய்தாலும், எங்களது பணியை தொடர்ந்து செய்வோம். உண்மையை தடை செய்ய முடியாது. இவ்வாறு ராகுல் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (42 + 13)

  • Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    கண்டு பயமில்லை தெரியும். உங்களுக்கு ED யை கண்டு தான் பயம்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    முகத்திலேயே தெரிகிறது. என்னவொரு பயம். ஆனால் சும்மா வீராப்புக்கு "மோடியைக் கண்டு பயமில்லை" என்று கூறுகிறான் இந்த சின்ன பயல்.

  • Bhaskar Srinivasan - Trichy,இந்தியா

    பச்ச புள்ளய இறுகிய, இது மோடி விளையாட்டு இல்ல தம்பி, இது சுப்பிரமணிய ஸ்வாமி ஓட விளையாட்டு, எங்க சிங்க லேடியையே அவரு A1 ஆகிட்டாரு நீ என்ன பச்ச கொழந்தை, பேசாம நான் பிரிட்டிஷ்காரன் இன்னு சொல்லிட்டு ஓடிப்போய்டு .

  • thiagarajan -

    தீட்சை பெற்ற பப்பு குடும்பத்துடன் இமயமலை செல்ல வேண்டியதுதான் பாக்கி. மறக்காமல் இங்க இருக்கிற ஒரு குடும்பத்தையும் தள்ளிட்டு போயிடுங்க !

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    உண்மை. நீ தான் பழி,பாவத்திற்கு அஞ்சாமல் லஞ்சம் வாங்கும் குடும்பத்தை சேர்ந்தவன் ஆயிற்றே ,உனது பாடி,தந்தை எல்லோரும் அப்படி தானே.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்