முதல்வர் வழங்கிய கார் சேதம்
பெரம்பலுார்: அரசு சார்பில், அரியலுார் நகராட்சிக்கு புதிதாக வழங்கிய கார், விபத்தில் சிக்கி சேதமடைந்தது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில், அரியலுார் நகராட்சி ஆணையர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு, புதிய 'ஸ்கார்பியோ' மற்றும் 'பொலிரோ' கார்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டது.
இதில், ஸ்கார்பியோ கார் மீது, சென்னையில் இருந்து வரும் வழியில், லாரி மோதியது. இதனால், காரின் வலது பக்க கதவுகள் சேதமடைந்தன.இது குறித்து, நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியாவிடம் கேட்ட போது, ''சென்னையில் இருந்து வந்த போது, மழை பெய்ததால், லாரி ஒன்று கார் மீது லேசாக மோதி விட்டது. அதனால் சிறிய அளவில் சேதமடைந்தது; விரைவில் சரி செய்யப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதெல்லாம் ஒரு நியூஸ்..