கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியை, கடந்த, 13ம் தேதி அதிகாலை நான்கு பேர் துாக்கிச் செல்வது போன்ற 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி இறப்புக்காக, 17ம் தேதி நடந்த போராட்டம், பெரும் கலவரமாக மாறியது. இதில், பள்ளி, போலீஸ் வாகனங்கள் மற்றும் பள்ளியில் உள்ள ஆவணங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையின் போது வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், வகுப்பறையில் அமர்ந்திருப்பது மற்றும் மாடிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பிறகு ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
நேற்று மதியம், மாணவி ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது. அதில், விடுதி தரைத்தளத்தில் இருந்து மாணவியை, மூன்று பெண்கள், ஒரு ஆண் என, நான்கு பேர் துாக்கிச் செல்வது பதிவாகி இருந்தது. இதில், ஜூலை, 13ம் தேதி அதிகாலை, 5.24 மணி என, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய வீடியோ காட்சி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர் கருத்து (33)
இந்த விடீயோக்களை வெளியிடுபவரை பிடித்து மொத்த விடீயோக்களையும் பறிமுதல் செய்து இவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.
ஒரு விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவரை இப்படித்தான் செத்த நாயைத் தூக்கி எறிவதுபோல் வாரிக்கொண்டு போவார்களா? விடுதி, பள்ளி நடத்துபவர்களுக்கு விபத்தை முதலில் போலீசுக்குத் தெரிவிக்க வேண்டும், கண்டபடி தூக்கி பிரசினை ஆகும் என்று கூடவா தெரியாது ? விஷயமே வேறு இந்தப்பெண்தான்செத்து விட்ட பிறகு ஆம்புலன்ஸ் எதற்கு, அள்ளிப் போட்டுவிட்டுப் போவோம் என்ற அலட்சியம்தான்
இது வேதனையா இருக்கு ஆனாலும் தமிழ் நாட்டில் சாதிக் அண்ணா நகர் ரமேஷ் என்று பலரும் தற்கொலை செய்து கொண்டு தடயங்கள் இல்லாமல் காணாமல் போயுள்ளனர் அதுபோல இதுவுமா?
மொத்தத்தில் பயன் ஒன்றும் இல்லை . அடுத்து பெரும் செய்தி வந்தால் இது மறந்துபோகும் மக்களுக்கு.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இதில் பள்ளி உரிமையாளர் இந்த பெண்ணை கொலை செய்ய வேண்டிய காரணம் என்ன என்பது எதிலும் விளக்கப்படவில்லை.