போலீஸ் பயிற்சி பள்ளியில் கொரோனா தொற்று அதிகரிப்பு
புதுச்சேரி : கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் போலீசாரிடையே வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 29 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் போலீஸ் பணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 பேர், கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி யில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர்.கடந்த மாதம் பள்ளியில் பயிலும் காவலர்களில் சிலருக்கு, காய்ச்சல் இருந்தது. அன்று முதல் ஒன்று இரண்டு என பதிவான கொரோனா தொற்று, கடந்த வாரம் மட்டும் 20 பேராக அதிகரித்தது.
மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,659 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், புதுச்சேரி 107, காரைக்கால் 34, ஏனாம் 5 ஆக மொத்தம் 146 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பரவல் 8.80 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறுகிய இடத்தில் வகுப்புகள் நடப்பதும், குறுகிய இடத்தில் பயிற்சி காவலர்கள் அனைவரும் தங்கி இருப்பதும் கொரோனா தொற்றுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,659 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில், புதுச்சேரி 107, காரைக்கால் 34, ஏனாம் 5 ஆக மொத்தம் 146 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பரவல் 8.80 சதவீதமாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!