Load Image
dinamalar telegram
Advertisement

ஊட்டியில் கனமழை: வெள்ளத்தால் பாதிப்பு

Tamil News
ADVERTISEMENT
ஊட்டி- -ஊட்டியில் பெய்த கனமழையின் போது, பல இடங்களில் வெள்ளம் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. ஊட்டியில், நேற்று மதியம் ஒரு மணியளவில் துவங்கிய கனமழை, 3:00 மணி வரை நீடித்தது.

சேரிங்கிராஸ், ஊட்டி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து பாதித்தது. ஊட்டி ஏரியில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறுகையில், ''நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்' அறிவிக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், 42 மண்டல குழுக்கள் அமைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில், 456 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதியில் பாதிப்பு இருந்தால், வருவாய் துறையை அணுகி நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.


வாசகர் கருத்து (1)

  • Emperor SR - Ooty,இந்தியா

    மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முந்தய ஆட்சியில் பருவ மழை காலத்திற்கு முன்பாகவே தொண்டாக பட்டு, மழை பாதிப்புகள் அவ்வளவாக இல்லாம கையாளப்பட்டது... இந்த விடியல் ஆட்சியில் எல்லாமே தாமதம் தான். மழை வெளுத்து வாங்கிய பிறகு நடவடிக்கை எடுப்பதாக தான் உள்ளது.. காலக்கொடுமை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement