Load Image
Advertisement

பழனிசாமி மீதான சிபிஐ விசாரணை: ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 பழனிசாமி மீதான சிபிஐ விசாரணை: ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
ADVERTISEMENT

புதுடில்லி : தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான, 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக முதல்வராக பதவி வகித்த காலத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 4,800 கோடி ரூபாய் டெண்டரை, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கே வழங்கினார் என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் அவர், மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது.

Latest Tamil News
ஆனால் இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், தமிழக அரசு வக்கீல் சமீபத்தில் முறையிட்டார். இதையடுத்து இந்த மனு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, இதில் வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Latest Tamil News
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி நேற்று தாக்கல் செய்த கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒப்பந்த பணிகளுக்கு அதிக விலை வழங்கியுள்ளதால், அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலக வங்கி வழிகாட்டு விதிமுறைகளை மீறி, தன் உறவினர்களுக்கு பழனிசாமி டெண்டர் வழங்கி உள்ளார். எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற பழனிசாமியின் மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Latest Tamil News
இந்த வழக்கு இன்று, விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டியதில்லை எனக்கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து (49)

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    இந்த பழனி யார் பேச்சையே கேட்டு ஆடுகிறான் என்று தெரியாது. ஆனால் வலையில் மீன் நன்றாக மாட்டி கொண்டது. விரைவில் தீர்ப்பை சொல்லுங்கள்.

  • John Miller - Hamilton,பெர்முடா

    நாம் மறுபடியும் எல்லா வழக்குகளையும் ஆலமரத்தடி பஞ்சாயத்தில் தீர்த்து கொள்வதே நல்லது. வக்கீலுக்கு பீஸ் கொடுக்க வேண்டாம்.

  • John Miller - Hamilton,பெர்முடா

    இந்த தீர்ப்பை சொல்ல நான்கு வருடம்களா?

  • Suri - Chennai,இந்தியா

    அமாவாசை அரசியல் வாழ்க்கைக்கு சாவுமணி அடிக்கப்போகும் வழக்காக தான் நான் பார்க்கிறேன்.

  • Suri - Chennai,இந்தியா

    தி முக போட்ட ஊழல் வழக்கு ஒன்று கூட இது வரை சோடை போனதில்லை. A1 க்கு சு சாமி பதிந்த வழக்கு ஒரு பக்கம் குடைச்சல் தந்தது என்றால் தி மு க போட்ட வழக்கும் கடைசி வரை அவர் காலை சுற்றிய பாம்பாக இருந்தது.. மீளவே முடியாமல் அந்த வழக்குகளில் சிக்கி தவித்த கதை எல்லாம் வரலாறு... மண்புழு எல்லாம் எம்மாத்திரம்?? நாட்டில் பல்வேறு அசிங்கமான முன்னுதாரங்களை A1 படைத்தது எல்லாம் தி மு க தொடுத்த வழக்குகள் மட்டும் தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்