Load Image
Advertisement

4ஜி கட்டணத்தை உயர்த்தி 5ஜிக்கு மாற்றும் உத்தி

 4ஜி கட்டணத்தை உயர்த்தி 5ஜிக்கு மாற்றும் உத்தி
ADVERTISEMENT
புதுடில்லி: 5ஜி இணைப்புக்கான கட்டணத்திற்கு பெரிதளவு வித்தியாசம் இல்லாத வகையில் 4ஜி கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களை 5ஜி சேவைக்கு மாற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் உத்தேசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த திங்கள் அன்று, ‛5ஜி ஸ்பெக்ட்ரம்' ஏலம் முடிவு பெற்றதை அடுத்து, அடுத்தகட்டமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள், கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கும் என, தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் முதல் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், 1.5 லட்சம் கோடி ரூபாயுடன் முடிவுக்கு வந்துள்ளது. ஏலம் எடுப்பதற்காக ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை செலவு செய்துள்ளன.

Latest Tamil News
இதன் காரணமாக, அந்த செலவை ஈடுகட்டும் விதமாக, தொலைபேசி மற்றும் பிராட்பேண்டு சேவைகளுக்கான கட்டணத்தை, மீண்டும் ஒருமுறை நிறுவனங்கள் அதிகரிக்க கூடும். அடுத்து, 4ஜி சேவைக்கும் 5ஜி சேவைக்கும் இடையே கட்டணத்தில் வித்தியாசம் அதிகம் இருப்பின், வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சிரமமாக இருக்கும். இதனால், தற்போது சேவையில் இருக்கும் 4ஜி இணைப்புக்கான கட்டணத்தை அதிகரிக்க நிறுவனங்கள் முயற்சிக்கும். பெரிய அளவில் கட்டண வித்தியாசம் இல்லை எனும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் 5ஜி சேவைக்கு மாற முன்வருவர்.


கட்டண உயர்வை பொறுத்தவரை, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான்கு சதவீத உயர்வை நிறுவனங்கள் அறிவிக்க கூடும். அல்லது, நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி., / 4ஜி இணைப்புக்கான கட்டணத்தில், 30 சதவீத உயர்வை அறிவிக்க கூடும். நிறுவனங்களை பொறுத்து, கட்டண உயர்வு குறித்த முடிவுகள் வேறுபடக்கூடும். ஆனால், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (18)

  • அப்புசாமி -

    கார்ப்பரேட்கள் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கும். அந்த ஏலத்தொகையைக் கட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும். வங்கிகள் மக்களின் டிபாசிட்டை அதிக வட்டிக்கு கார்ப்பரேட்களுக்கு கடன் குடுக்கும். 5 ஜி சேவையை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி உருவுவாங்க. கெவர்மெண்ட்டுக்கு கட்டவேண்டியதைக் கட்டிட்டு மீதியை சுருட்டிப்பாங்க.

  • Venkat - Chennai,இந்தியா

    போன வாரம் தான் புது மொபைல் (4G) எடுத்தான், இப்ப 5G க்கு மாற சொல்றிங்க ..என்ன பான்னனும் தெரில, நம்ம JI ய பாத்து பண்ண சொல்லுங்க ,

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    காங்கிரஸ் திமுக ஆட்சியில் 8000 கோடிக்கு எலம் விட்டது 2.5 G எதிர்பார்க்கப்பட்ட மதிப்பு 1,76,000 கோடி பாஜக ஆட்சியில் 1,50,000 கோடிக்கு 5 G ஏலம் விட்டுள்லது

  • ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா

    நான் 4G ல already one year pack recharge பண்ணிட்டேன், இந்த validity May 2023 ல் தான் முடியும். அதுவரை எனக்கு 5G internet service கிடையாது.

  • சந்திரசேகர் -

    gas, electrical, petrol, handphone bills,bus ticket all going increase every month. but common man salary not increase every year. middle family spend every month at least 15000Rs need.but they earn 5000 to 8000Rs. so how come they survival. every month lack of money.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்