ADVERTISEMENT
லண்டன் : பிரிட்டனைச் சேர்ந்த 'ராயல் மின்ட்' நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.
ஐரோப்பாவில் பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.அதுபோல ஆக 31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்க கட்டியின் எடை 20 கிராம். இதன் விலை ஒரு லட்சத்து 6543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலைதளம் வாயிலாக தங்கக் கட்டிக்கு பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மகாலட்சுமி உருவம் பொறித்த தங்கக் கட்டியை வடிவமைத்த எம்மா நோபல் என்பவர் தான் விநாயகர் உருவத்துடன் கூடிய தங்கக் கட்டியை வடிவமைத்துள்ளார். வேல்ஸ் பிராந்தியத்தின் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா விநாயகர் தங்க கட்டியை வடிவமைக்க உதவியுள்ளார்.
'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்' என ராயல் மின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (13)
தங்கம் விற்கும் யுக்தி. அஷ்டே....ஜைஹிந்த் புறம் அப்துல் காதர் .. சவூதி Meka and medina படம் போட்டு விற்றால், விற்கும் யுக்தி இல்லையா?
தமிழகத்தில் உள்ள ஹிந்து மத எதிர்ப்பாளர்கள் அவர்களிடம் இருந்து கட்கவேண்டும்.
ஹிந்து மதம் பற்றி இங்கே தினமும் வசை பாடுகிறார்கள். அங்கே கொண்டாடுகிறார்கள்.
வெளிநாட்டில் இப்படி ஆனால் நம் தமிழ்நாட்டில் ஒரு வாழ்த்து சொல்லக்கூட மனமில்லை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
பிஜேபி ஊழல் பணம் பூரா லண்டனில் குவிகிறது என்று தெரிகிறது