இக்கோயிலில் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவர். கோயில் வளாகத்தில் சில ஆண்டுகளாக யாகம் நடத்த அனுமதியில்லை. இதனால் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே யாகம் நடத்துகின்றனர். சென்னையில் நிலம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய தொழிலதிபர்களுடன் சபரீசன் நேற்று நடந்த யாகத்தில் கலந்து கொண்டார்.

இக்கோயிலில் இருந்து வள்ளி குகை செல்லும் கடற்கரையை ஒட்டிய சிறிய பாதையை வழிமறித்து சாமியானா பந்தல் அமைத்து காலை 7:00 முதல் 10:00 மணி வரை யாகம் நடந்தது. இதனால் பக்தர்கள் யாரும் வள்ளி குகைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. யாகம் நடந்த பகுதியை சுற்றி பாதுகாப்பு ஊழியர்கள், ஹிந்து அறநிலையத்துறையினர் இருந்தனர். ஹிந்து முன்னணி, பா.ஜ., ஆலய மேம்பாட்டு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு பக்தர்கள் கூடியதால் சலசலப்பு ஏற்பட்டது. யாகம் முடிந்ததும் வடக்கு வாசல் வழியாக சபரீசன் தரப்பினர் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து (64)
திராவிடம் பள்ள இளிக்குதுங்கோவ்........ நீங்களும் உங்கள் திராவிட மாடலும்.....
எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, யாகம் செய்வது, இவர்கள் ஆண்டவனுக்கே லஞ்சம் குடுப்பது போல இருக்கிறது.. யாகத்தின் பலன் புண்ணிய காரியங்களையே செய்துவரும் பக்தர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இவர்கள் செய்யும் யாகம், ஆண்டவனிடத்தில் வியாபாரம். பணத்தை விட்டெறிந்து ஆண்டவன் அருள் எல்லாம் பெறமுடியாது.. ஆண்டவன் அருள் கண்டிப்பாக பாவ காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்றுமே கிடைக்காது.
வெட்கம் கேட்ட திருட்டு ரயில்லேரி கும்பல்.
அமைச்சர் சேகர் பாபு இந்துக்களின் அரசு என்றார் அதுவெல்லாம் சும்மா வா.ஸ்டாலின் குடும்பத்து பூஜைக்கு(யாகத்துக்கு) இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்து பக்த கோடிகளை வள்ளி குகை செல்ல விடாமல் வழி மறித்து பூஜை செய்ய உதவி உள்ளனர். எனக்கு தெரிந்தவரை கொஞ்ச நாள் முன்னாடி மதுரை உயர்நீதிமன்றம் கிளை திருச்செந்தூர் கோயிலில் வி ஐ பி தரிசனம் கிடையாது என்று கூறியதாக ஞாபகம்.இந்த தீர்ப்பு எல்லாம் சபரீசனுக்கு கிடையாதா?கடவுள் முன் அனைவரும் சமம் என்று கூறினாரே நீதியரசர்,அதெல்லாம் இவருக்கு(சபரீசன்) பொருந்தாதா? .இந்த விஷயத்திலேயே இந்து அறநிலையத் துறையின் செயல்பாடு எந்த லட்சணத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். சேகர் பாபு முதல்வர் குடும்பத்துக்கு பணிவிடை செய்யவே நேரம் போதவில்லை.கோயில் நிலம் மீட்பது எல்லாம் இந்த மாதிரிதான் இருக்கும்.முருகா இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா?
திருச்செந்தூரில் சபரீசன் சத்ரு சம்ஹார யாகம். சத்ரு யாரு?