Load Image
dinamalar telegram
Advertisement

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது. இந்த நிலையில், காங்., தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் காங்., - எம்.பி.,யுமான ராகுல் ஆகியோரையும் அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
Latest Tamil Newsஇந்நிலையில், டில்லியில் உள்ள ஐ.டி.ஓ.,வில் அமைந்திருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆக.,2) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை முடிவுக்குப் பிறகே தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (12)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Ippadiye yeththanai kaalathukku thaan sothanai pottukkonde iruppeerkal. Seekkiram mudiththu thandanai vaanki kodunkal.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    உள்ளதும் போச்சுதாடா நொள்ளைக்கண்ணா, என்பதுபோல் அந்த ஐம்பது லட்சமும் கோவிந்தா தானா? அதிக ஆசை அதிக நஷ்ட்டம்.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    நேஷனல் ஹெறால்ட் பத்திரிகையை யங் இந்தியா வாங்கியது குற்றமா என்ன? அதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

    • vadivelu - thenkaasi,இந்தியா

      குற்றம் வாங்கியதில் இல்லை, அதன் பங்குதாரர்களை ஏமாற்றியதில்,அந்நிய செலாவணியை கையாண்டதில், ஹவாலா முறையியில் பணத்தை கை மாற்றியதில், பல கோடி மதிப்புள்ள சொத்தை சில ஆயிரங்களை வாங்கியதில்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    சோனியா தாய் ராகுல் மகனுக்கு பாடுகிறார்.சென்று வா மகனே சென்று வா.திஹார் சென்று வா மகனே சென்று வா.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    போலீஸ்கார் .... .போலீஸ்கார் ..... புடிச்சி உள்ள போடுங்க போலீஸ்கார் .......

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்