புதுடில்லி: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி தனது சமூக வலைதள கணக்குகளின் 'புரொபைல் பிச்சர்' எனப்படும் சுயவிபர படமாக, மூவர்ணக் கொடியை மாற்றியுள்ளார்.

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 2) பிரதமர் மோடி, தனது சமூக வலைதளப் பக்கங்கள் அனைத்திலும் தேசியக் கொடி படத்தை ‛புரொபைல் பிச்சராக' வைத்து பதிவிட்டுள்ளார். இதனையடுத்து பலரும் தங்களது சுயவிபர படத்தை மாற்றி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மிகப் பெரும் மக்கள் இயக்கமாக கொண்டாடி வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுபோல் மாற்றி உள்ளார்.
வாசகர் கருத்து (3)
1960-முதல் இன்றுவரை சுதந்திர தினம் பணக்காரர் மற்றும் படாடொபக்கார்கள் தினமாக மாறிவிட்டதைப் பார்த்து வருகிறேன். இதற்குக் காரணம் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் கிரிமினல்கள் கையில் நாடு சிக்கித் தவிப்பதுதான்.முதலில் பிரதமர் வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு டிக்கட் கொடுக்காமல் இருந்தாலே போதும்.
இந்த நாட்டில் குற்றங்கள் பல செய்பவர்கள் சுதந்திரமாக இருக்கின்றனர்.அப்பாவிகள் அரசாங்கத்தின் பெயரால் அதில் உள்ள குற்றவாளிகளால் கொடுமைப்படுத்தப் படுகின்றனர். சுதந்திரம் பெற்றதன் பயன் அனைவருக்கும் கிடைக்கவில்லை.அப்படி இருக்க தேசிய கோடியை அனைவரும் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிவிட்டால் மட்டும் தேசப்பற்று மக்களிடையே வந்துவிடாது.இது வெறும் நடிப்பே.அதை விடுத்து செயலில் காட்ட வேண்டும். அதுதான் அரசியல் வாதிகளிடம் இல்லை.
,,,,