Load Image
dinamalar telegram
Advertisement

பன்னீர், பழனி ஒருங்கிணையாவிட்டால் பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி?

Tamil News
ADVERTISEMENT
அ.தி.மு.க.,வில், பன்னீர்செல்வம், பழனிசாமி அணிகள் ஒருங்கிணையாவிட்டால், லோக்சபா தேர்தலின் போது, தமிழக பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து, இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவது குறித்து, அக்கட்சி மேலிடம் ஆலோசித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் உருவான மோதலால், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக செயல்படுகின்றனர். இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற, டில்லி பா.ஜ., மேலிடத்தின் விருப்பத்தை பழனிசாமி தரப்பு ஏற்க மறுத்து விட்டது.

'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை துவக்கி வைக்க, தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க பழனிசாமிக்கும், வழியனுப்பி வைக்க பன்னீர் செல்வத்திற்கும் அனுமதி தரப்பட்டது; தனியான சந்திப்புக்கு அனுமதி தரப்படவில்லை.தற்போதைய சூழலில், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைய வாய்ப்பில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

அ.தி.மு.க., ஒருங்கிணையவில்லை என்றால், தமிழக பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து, இரட்டை இலக்கங்களில் வெற்றி பெறுவது குறித்து, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து உள்ளது.

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: வரும், 2024ல், தமிழகத்தில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, பா.ஜ., மேலிடம் இரண்டு திட்டங்களை வகுத்துள்ளது. அ.தி.மு.க., தலைவர்களை ஒன்றாக இணைத்து, அக்கட்சிக்கு, 24 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 15 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுவது என்பது முதலாவது திட்டம்.Latest Tamil News
அதேநேரத்தில், பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட பழனிசாமி விரும்பவில்லை என்றால், தேர்தல் கமிஷன் வாயிலாக, இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகும்.

அப்போது, தமிழக பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து, மெகா கூட்டணி உருவாக்கி தேர்தலை சந்திக்க தயாராவது என்பது இரண்டாவது திட்டம். உ.பி., - கர்நாடகா, பீஹார், மஹாராஷ்டிரா மாநிலங்களில் மும்முனைப் போட்டியில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட போது, எதிர்மறை ஓட்டுக்கள் பிரிந்து, கன்னியாகுமரியில் பா.ஜ.,வும், தர்மபுரியில் பா.ம.க.,வும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசும் வெற்றி பெற்றன. எனவே, எதிர்மறை ஓட்டுக்கள் பிரிவது, பா.ஜ., வெற்றிக்கு உகந்ததாக அமைய வாய்ப்பு உள்ளது.

அதனால், தமிழகத்திலும் மும்முனைப் போட்டியில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவது குறித்து, பா.ஜ., மேலிடம் ஆலோசித்துள்ளது. இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.


- நமது நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (64)

 • விஜய் -

  பா ஜா தலைமையில் 3 வது அணி.....!!!!! தமாசு..... தமாசு.....இப்டி அப்பப்ப காமெடிய கொளுத்தி போட்டீங்கன்னாதான் உங்க பேப்பரையே படிக்க முடியும்

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  கற்பனைக்கு அளவில்லை, இங்கு அடிமைகளை பயமுறுத்தியாவது கூட்டணியை தக்க வைக்கவே முயற்சி எடுக்கப்படும், ஒரு அடிமை பலப்பட்டுவிட்டால் அந்த அடிமை சுதாரித்துவிடும் அல்லவா? அதற்கு இடம் கொடுத்துவிட்டால் அரசு அதிகாரம் பயனற்றதாக விட்டுவிட ஜனநாயக சிந்தனை கொண்டவர்களா?

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  எடப்பாடி பழனிசாமி அவர்களே, கண்டிப்பாக பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவார். மறைமுகமாக அவருக்கு ஆளும் திமுக, சசிகலா, டிடிவி.தினகரன் ஆதரவு இருக்கும் அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். சின்னத்தை முடக்கினாலும் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தங்கள் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி நிலைநிறுத்தவேண்டும். ஓபிஎஸ் நிச்சயமாக தனித்து போட்டியிடமாட்டார். எடப்பாடி பழனிசாமி அவர்களே நீங்கள் 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா பாணியில் தனித்து நின்றாலே போதும் அதிமுக தொண்டர்கள் வெறித்தனமாக தேர்தல் வேலை செய்வார்கள். வெற்றி தோல்வியை பற்றி நீங்கள் கவலைப்பாதீர்கள், உண்மையான தொண்டர்கள் பன்னீர்செல்வத்துக்கு எதிராக இருக்கிறார்கள். கடுமையாக பணியாற்றி உங்கள் அதிமுகவின் வாக்கு சதவிகிதத்தை தமிழ்நாட்டின் நம்பர் ஒன் என்று உயர்த்துங்கள். செயல் திறன் சுத்தமாக இல்லாத தற்போதைய ஆளும் அரசு மீது, திமுக மீது தமிழக வாக்காளர்கள் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். அதை லம்ப்பா அறுவடை செய்ய பாருங்கள். சொல்லமுடியாது, இருபது தொகுதிகளில் தனித்து நின்று வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் சில விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லுங்கள். உதாரணத்திற்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் கொள்ளைடித்து வசமாக சிக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல், இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் இனப்படுகொலை செய்ய உறுதுணையாக இருந்தது, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று அள்ளிவிட்டது, சிலிண்டர் மான்யம், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைப்போம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று அள்ளி விட்டதை மக்களுக்கு ஞாபகப்படுத்தி கொண்டே இருங்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பழனி தனி ஆளாக இரட்டை இலையுடன் நிற்பார். பிஜேபி கூட்டணி வகிக்கும்

 • ThiaguK - Madurai,இந்தியா

  இரண்டு இலையும் (தலையும்) பீ ஜே பியில் இணைவது ஒன்றே ஒளிமயமான எதிர்காலம் இல்லையேல் சுடலையின் சூழ்ச்சியில் மொத்தமும் போய்விடும் போன சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போல

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்