Load Image
dinamalar telegram
Advertisement

அளவு குறைவாக ஆவின் பால் பாக்கெட்: விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி

Tamil News
ADVERTISEMENT
சென்னை : ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவாக இருப்பதால், விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ஆவின் நிறுவனம் வாயிலாக, தமிழகம் முழு தும் உள்ள விவசாயிகளி டம் இருந்து, நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இவை மூன்று தரங்களாக பிரிக்கப் பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. சென்னையில் நாள்தோறும், 13 லட்சம்; மற்ற மாவட்டங்களில், 20 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

எஞ்சிய பாலில் வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட, 80 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி, பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது. நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புற மக்களும், ஆவின் பாலை, கடைகளில் கேட்டு வாங்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஆவின் பால் பாக்கெட் அளவு குறைவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் விற்பனைக்கு வந்த 500 மி.லி., பால் பாக்கெட்டில், அளவு குறைவாக இருந்தது. ஆவின் பால் பாக்கெட்டை பொறுத்தவரை, அதன் அளவை, கிராமில் கணக்கிடும்போது, 500 மி.லி., என்பது, 517 கிராம் இருக்க வேண்டும். இதில், பால் பாக்கெட் 2 கிராம் இருக்கும். எவ்வகையிலும் பாலின் எடை, 515 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.Latest Tamil News
ஆனால், இரு நாட்களாக விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டுகள் 430 கிராம் மட்டுமே இருந்தன. இதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த பால் முகவர் ஒருவர், ஆவின் அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் வாயிலாக தகவல் அனுப்பியுள்ளார். ஆனால், அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, நேற்றும் விற்பனைக்கு வந்த பால் பாக்கெட்டின் அளவு குறைவாக இருந்தது.

ஒரு பாக்கெட்டை கணக்கிடும் போது, இது சிறிய அளவாக இருந்தாலும், நாள்தோறும் விற்பனையாகும், 33 லட்சம் லிட்டர் பாலை கணக்கிடும் போது, அளவு குறைவால், பல லிட்டர் பால், நுகர்வோருக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது. விலை குறைப்பால், ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிப்பதற்கும், துறையின் முக்கிய புள்ளி உள்ளிட்டோருக்கு வருவாய் கிடைக்கவும், இந்த நுாதன செயலில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி நுகர்வோர்களுக்கு சரியான அளவில், பால் கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறுகையில், 'சென்னை, மாதவரம் பால் பண்ணையில் புதிய இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் உள்ள சிறிய குறைபாடு காரணமாக, இந்த அளவு குறைவு ஏற்பட்டிருக்கலாம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (61)

 • Rajan -

  பால் கிராம் கணக்கில் சொல்லக் கூடாது. மில்லி லிட்டர் என்பது வே சரி.சரி. கவர் மட்டுமே கிராம் கணக்கில் வரும். இப்ப எண்ண குறைவாக இருக்கும் 85 ML க்கு தண்ணிய ஊத்தி adjust செய்வாங்க. என்ன செய்ய முடியும்?

 • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

  ஆக.... ஒரு நாளைக்கு இரண்டு கோடிக்கும் அதிகமாக கண்ணுக்குத் தெரியாத வருமானம். இதுதான் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாவதா? எப்பாலும் தோற்காத திராவிடப் பால்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  இது தான் திராவிட மாடல். எங்கும் ஊழல். எதிலும் ஊழல். நூதன ஊழல்.விஞ்ஞான ஊழல்.

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  அளவு குறைவாக 'ஆவின்' பால் பாக்கெட்: விற்பனையாளர்கள் கடும் அதிர்ச்சி.விடியல் அரசின் மற்றுமொரு சறுக்கல் .வழக்கம் போல பிஜேபி ஒன்றிய அரசு தான் பால் பாக்கெட்டுகளில் பாலின் அளவை குறைத்து விநியோகம் செய்யச்சொன்னதாக சொல்லிவிடாதீர்கள் ஏனென்றால் அதை கூட நம்புவதற்கு கூட்டங்கள் உள்ளன என்பது தான் நிதர்சனம்

 • Soumya - Trichy,இந்தியா

  கட்டிங் கமிஷன் முதலாளி மூனு ஓவா குறைச்சிட்டு திராவிஷ பாணியில் ஆறு ஓவா அமுக்கிடுவார் வாழ்க திராவிஷ ஐயா

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்