Load Image
dinamalar telegram
Advertisement

சொத்து விபரம் அறிய வருவாய் துறையில் வசதி

Tamil News
ADVERTISEMENT
சென்னை : வீடு, மனை வாங்குவோர், அது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை அறிய, ஆன்லைன் முறையில், புதிய வசதியை வருவாய் துறை உருவாக்கி உள்ளது.


தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அது தொடர்பான பத்திரங்களையும், வில்லங்க சான்றிதழ்களையும் ஆய்வு செய்வது வழக்கம். இதில், சொத்தில் சட்ட ரீதியான பிரச்னைகள் இருந்தால், உடனடியாக தெரிந்து விடும். அதற்கேற்ப முடிவு எடுக்கலாம்.


கட்டட அனுமதி வழங்கும் அரசு துறைகள், கடன் வழங்கும் வங்கிகள் போன்றவை, சொத்து தொடர்பான உண்மை தன்மையை, வழக்கறிஞர் வாயிலாக ஆய்வு செய்கின்றன. இருப்பினும், பல இடங்களில் வழக்கு விபரங்களை மறைத்து, சொத்துக்கள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், சொத்து வாங்குவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


அறக்கட்டளை




இதுகுறித்து, சொத்து மதிப்பீட்டாளர்கள் கூறியதாவது:ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு கடன் கேட்டு விண்ணப்பித்தால், அந்த சொத்து தொடர்பாக, நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவது அவசியம். பெரும்பாலான இடங்களில் குடும்ப உறுப்பினர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள், சங்கங்களின் சொத்துக்கள் மீது, உரிமையியல் வழக்குகள் தொடரப்படுகின்றன.


நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், வழக்கு விபரங்கள் வில்லங்க சான்றிதழில் வராது. இதை பயன்படுத்தி, வழக்கில் சிக்கிய சொத்துக்களை, வங்கிகளில் அடமானம் வைத்து, பெரிய தொகையை கடனாக பெறுகின்றனர். வழக்கில், எதிர் தரப்பு வெற்றி பெறும் நிலையில் கடன் கொடுத்தவர், சொத்து வாங்கியோர் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால், வழக்கு விபரங்களை சொத்து தொடர்பான ஆவணங்களுடன் இணைத்து, மக்கள் அறிய வசதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Latest Tamil News

இணையதளம்




வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியால், சொத்து ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதே போல, நீதித்துறையும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. உரிமையியல் வழக்குகள் நிலுவை விபரங்களை, சொத்து வாங்குவோர் ஆன்லைன் முறையில் தெரிந்து கொள்ள, புதிய வசதி உருவாக்கப்பட்டு வருகிறது.


இதில், வருவாய் துறை இணையதளம் வாயிலாக, 'இ - கோர்ட்' தகவல் தொகுப்பை, மக்கள் பயன்படுத்தும் வகையில் வசதி செய்யப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த வசதி, எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில், இது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து (3)

  • Raa - Chennai,இந்தியா

    இதனை செய்தி சொன்னதுக்கு கூடவே அந்த இணையதள முகவரியும் கொடுத்துருக்கலாமே

  • S.Ganesan - Hosur,இந்தியா

    வழக்கு விவரங்களை பதிந்தால்தானே தெரியவரும். இங்கே உள்ள பிராடுகள் அதிலும் குறுக்கு வழி கண்டுபிடித்து விடுவார்கள். " திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement