கோவை, ரத்தினபுரி பகுதியில் சுற்றித்திரியும் வாலிபர்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு இருப்பதாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு புகார்கள் வந்தன.நடவடிக்கை எடுப்பதற்காக, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கமிஷனர் உத்தரவிட்டார்.தனிப்படை போலீசார், கண்ணப்ப நகர் சங்கனுார் ரோடு சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

பிடிபட்ட நபர் அறிவொளி நகர் அண்ணா சதுக்கத்தைச் சேர்ந்த பாலாஜி, 58, என்பதும், அண்ணா மார்க்கெட்டில் கூலி வேலை செய்தவர், இப்போது கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான், உ.பி., மாநிலங்களில் இருந்து ரயிலில் கடத்தி வரப்படும் கஞ்சா சாக்லேட்டுகளை, டெயில் சுரேஷ் என்பவன் கோவையில் ஆட்களை வைத்து விற்பனை செய்வது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
கோவை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர்களின் பட்டியலையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.அதன்படி, கும்பல் தலைவன் டெயில் சுரேஷ் உட்பட 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை ஆர்.எஸ். புரத்தில் சில நாட்களுக்கு முன், இதேபோல, கஞ்சா சாக்லேட்டுகளுடன் ராஜஸ்தான் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (9)
தினம் தினம் கஞ்சா பறிமுதல் செய்தி இல்லாத நாள் இல்லை ...இது என்ன மாடல் தெரியவில்லை ...குட்கா விவாகரத்தை பெரிதாக்கியவர்களின் இப்போதைய பதில் என்னவோ
கோவையில் 20 கிலோ கஞ்சா 'சாக்லேட்' பறிமுதல்: ???? சரி சரி யாரிடமிருந்து பொலிஸிடமிருந்தா . ஏனெனில் போன வாரம்தான் நான்கு காவலர்கள் கஞ்ச விட்டதால் கைது என படித்தேன்
திரு ராகவன் என்ற எழுத்தாளர் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் எழுதியகதையில் ஆப்கானில் இருந்து தமிழகம் வழியாக உலகின் பலநாடுகளுக்கும் போதைப்பொருள் கடத்தப்படுவதையும் .போதை எண்ணெயில் தயாரித்த அப்பம் மாணவர்களுக்கு விற்கப்பட்டு அவர்களை போதைக்கு அடிமையாக்குவதையும்நன்றாக விவரித்திருந்தார் .நம் அதிகாரிகளின் நாள் ஆசிகளுடன் தான் இம்மாதிரி நடக்கும்
டெயில் (வால் ) ஐ பிடித்துக்கொண்டு தொடர்ந்தால் பெரும் பெரும் 'தலைகள்' உருளும் தலைகளை பிடிக்க முடியாது வாள்கள் உருவிக்கொண்டு ஓடிவிடும் ஜனாதிபதி பரிசு வாங்க போலீஸ் அமைச்சர் கெத்தாக வருவார்
திருட்டு திராவிட ஓங்கோல் விடியாமூஞ்சிகள் ஆட்சியில் தமிழகம் போதையின் பிடியில் சென்று விட்டது.....