Load Image
Advertisement

தங்கம் வென்றார் ஜெரிமி: காமன்வெல்த் பளுதூக்குதலில் அசத்தல்

Tamil News
ADVERTISEMENT
பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியாவின் ஜெரிமி லால்ரின்னுங்கா (67 கிலோ) தங்கம் வென்றார்.


இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 67 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் ஜெரிமி லால்ரின்னுங்கா பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சமாக 140 கிலோ துாக்கிய இவர், 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 160 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 300 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டு சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.

Latest Tamil News
இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு 2வது தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார். ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றிருந்தார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கம். இதுவரை 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் கிடைத்துள்ளன.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (1)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    ஜெரிமி லால்ரின்னுங்காவுக்கு வாழ்த்துகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்