ADVERTISEMENT
சென்னை : பயணியர் கூட்டம் அதிகரிப்பால், சென்னை - லண்டன் இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்பட்ட 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம், நாளை முதல் தினமும் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணியர் விமானம், கொரோனா பாதிப்பிற்கு பின், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால், இந்த விமானத்தில் எப்போதுமே பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னையில் இருந்து லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்திற்கு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பாரிஸ், ஸ்காட்லாந்து, ரோம், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணியருக்கு இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வருகிறது.

எனவே பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளதால், இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என, கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், ஆக., 1 முதல், வாரத்தில் ஏழு நாட்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களின் இருக்கை வசதி மிகவும் மோசம். எட்டு மணிநேர பயணம் முட்டிவலியில் முடியும்.