தி.மு.க., அமைச்சர்கள் மீதும் வழக்கு போடுங்கள்: பழனிசாமி
சென்னை: மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் பெண் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய 'ரெய்டில்' கோடிக்கணக்கில் பணம், நகை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி அவரை கட்சியில்இருந்து 'சஸ்பெண்ட்' செய்துள்ளார்.
அப்போது 'மேற்கு வங்கத்தில் செய்தது போல், தமிழகத்திலும் தி.மு.க., அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு போடுங்களேன்; அவர்களின் ஊழல் வெளியே வர வேண்டும்' என பிரதமரிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு, பழனிசாமியின் கைகளைப் பிடித்தபடி பிரதமர் சிரித்தாராம். இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் குழம்பியுள்ளனராம்.

இதே போல தமிழகத்தில் நடக்குமா; தமிழக அமைச்சர்கள் யாராவது இப்படி மாட்டுவரா என அ.தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக ஒரு விஷயம் டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு நடந்த பிரிவு உபசார விழாவில், தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். அவர் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச முடியாவிட்டாலும், இந்நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசினார்.

அப்போது 'மேற்கு வங்கத்தில் செய்தது போல், தமிழகத்திலும் தி.மு.க., அமைச்சர்கள் மீது ஏதாவது வழக்கு போடுங்களேன்; அவர்களின் ஊழல் வெளியே வர வேண்டும்' என பிரதமரிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு, பழனிசாமியின் கைகளைப் பிடித்தபடி பிரதமர் சிரித்தாராம். இந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் குழம்பியுள்ளனராம்.
வாசகர் கருத்து (15)
முதலில் நீங்கள் செய்யத ஊழலுக்கு உள்ளே போயிடு வந்து சொல்லுங்க
நீங்கள் இனி கனவில் கூட அதிகாரத்திற்கு வரமுடியாது . அம்மாவை தான் மக்கள் முதல்வராக தேர்வு செய்தனர் உங்களை அல்ல
உங்க மேல நிறைய வழக்கு பாய தயாராக உள்ளது ரெடியா இருந்து கொங்கு பழனி சார்
உங்களுக்கு தெரியும் இன்றைய அமைச்சர்கள் எதில் எவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்று. நீங்கள் இதை வைத்து பொது வெளியில் சொல்லலாம் ஏன் ஊழல் வழக்கு பதியசெய்ய நீதிமன்றம் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க கேட்கலாம். இதை நீங்கள் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இந்த ஊழல் பணத்தில் உங்களுக்கோ உங்கள் கட்சிக்கோ சிறிய பங்கு வரும் உங்கள் ஆட்சியிலும் இப்படி இந்த நடைமுறை இருந்தால் தான் ஆட்சி தொடர்ந்தது திமுக உங்கள் ஆட்சியை கவிழ்க்க வில்லை
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பழனிசாமியை ஒண்ணும் ஆட்ட முடியாது. கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்..