Load Image
Advertisement

ரூ.100 கோடி நிலக்கரி மாயம்; நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்

Tamil News
ADVERTISEMENT



சென்னை : மின் வாரிய அனல் மின் நிலையங்களில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 30 கோடி கிலோ நிலக்கரி மாயமான விவகாரத்தில், விசாரணை முடிந்து பல மாதங்களாகியும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஏன் தாமதம் என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன.அவற்றில் தினமும் பயன்படுத்த, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. இந்த நிலக்கரி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் சுரங்கங்களில் இருந்துதினமும் பெறப்படுகிறது.


அங்கிருந்து நிலக்கரி அனுப்புவதில் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில், தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்கப்படுகிறது.தமிழகத்தில், 2021 மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மின் துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, திருவள்ளூர் மாவட்டம், வட சென்னை மற்றும் துாத்துக்குடி அனல் மின் நிலையங்களில், அந்த ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு செய்தார்.
Latest Tamil News

அப்போது, வட சென்னை மின் நிலையத்தில் பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த இருப்பிற்கும், 23.80 கோடி கிலோ நிலக்கரிகுறைவாக இருப்பதைகண்டுபிடித்தார்.இதே போல், துாத்துக்குடி மின் நிலையத்திற்கும் பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும், அங்கு கொட்டி வைத்துள்ள இருப்பிற்கும், 7.20 கோடி கிலோ நிலக்கரி இருப்பு குறைவாக இருப்பதாக, செந்தில்பாலாஜி தெரிவித்தார்.இருப்பு குறைவாக இருந்த நிலக்கரியின் மதிப்பு, 100 கோடி ரூபாய். நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, மின் வாரிய உயரதிகாரிகள் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.


அக்குழு, வட சென்னை மற்றும் துாத்துக்குடி மின் நிலையங்களில் நேரடியாக விசாரணை நடத்தியது.விசாரணை அறிக்கை பல மாதங்களுக்கு முன், மின் வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிலக்கரி மாயமான விவகாரம் தொடர்பாக, எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.இதனால், உண்மையிலேயே நிலக்கரி மாயமானதா அல்லது அதில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட, பல்வேறுகேள்விகள் எழுகின்றன.


மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், தற்போது மின் கட்டணத்தை உயர்த்த கோரிய மனு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம்மனு மீது, பொது மக்களிடம் கருத்து கேட்டு, விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.எனவே, அதற்கு முன்னதாக மின் வாரியத்திற்கு, நிலக்கரி மாயமான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியஅவசியம் ஏற்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (7)

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    எறும்பு நிலக்கரியை சாப்பிடுமா? கட்டுவிடம்தான் கேட்கவேண்டும்

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    தனியாரிடம் விற்றிருப்பார்கள் .......

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நிலக்கரியை கரையான் சாப்பிட்டு விட்டது என்று கதை சொல்ல அதிக வாய்ப்பிருக்கிறது..

  • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

    After the report, settlement would have been completed. That is why the report is buried. The report is only to arrive at the quantum of settlement. Great

  • Indhuindian - Chennai,இந்தியா

    இது சுமார் முப்பதாயிரம் டன் - வெளியே எடுத்து செல்ல சுமார் ரெண்டாயிரதுக்கு மேல் டிப்பர் லாரிகள் தேவை. நிலக்கரி சேகரிப்பு மையத்தில் இருந்து இரண்டாயிரம் லாரிகள் வெளியே யாருக்கும் தெரியாமல் போவது சாத்தியமா. எனவே இது முதலில் உள்ளே வரவில்லை வந்ததாக கணக்கு ஏஷுதி இருக்கிறார்கள். நேற்று ஒரு கலந்துடறயலில் பிரதம மந்திரி ஒரு வினா ஏஷுப்பினார் எல்லோரும் கரண்ட் பில் சரியான நேரத்தில் காட்டுகிறார்கள் ஆனால் மின் வாரியங்கள் ஏன் கடன் வைக்கிறார்கள் என்று. ஒன்று மின் வாரியண்களின் இலவச மின்சாரம், மின்சார திருட்டு, இது மாதிரி கொள்ளை, வூசல், மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பது (வியாபாரம் எப்படி பண்ணனும்ன்னு நம்ம அண்ணாச்சிகல கேட்டா தெரியாத) இதெல்லாம்தான் காரணம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up