Load Image
Advertisement

காமன்வெல்த்: பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

 காமன்வெல்த்: பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு 3 பதக்கம்
ADVERTISEMENT
பர்மிங்காம்: காமன்வெல்த் போட்டி,பளுதுாக்குதலில் 3 பதக்கங்கள் வென்றது இந்தியா. பளுதுாக்குதலில் இந்திய வீரர் சங்கீத் மஹாதேவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். குருராஜா வெண்கலம் வென்றார். மகளிர் 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். ஒரே நாளில் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.


இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான 55 கிலோ பளுதுாக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மூன்று முறை தேசிய சாம்பியன் ஆன சங்கீத் மஹாதேவ் சர்கார் 21, முதன் முறையாக காமன்வெல்த்தில் பங்கேற்றார். முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் மஹாதேவ், அதிகபட்சம் 113 கிலோ துாக்கி முதலிடம் பெற்றார். மலேசியாவின் முகமது அனிக், 107 கிலோ துாக்கி இரண்டாவது இடம் பெற்றார்.
Latest Tamil News

அடுத்து 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் பளுதுாக்கினர். இதில் முதல் வாய்ப்பில் 135 கிலோ துாக்கிய மஹாதேவ், அடுத்த பிரிவில் 139 கிலோ துாக்க முயன்றார். துரதிருஷ்வசமாக வலது முழங்கையில் காயம் அடைந்தார். தொடர்ந்து மூன்றாவது வாய்ப்பிலும் காயத்தால் துாக்க முடிவில்லை.

Latest Tamil News
ஒட்டுமொத்தமாக மஹாதேவ் 248 கிலோ (113+125) துாக்கினார். அடுத்து மலேசிய வீரர் முகமது அனிக், மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 142 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக இவர் 249 கிலோ துாக்கி, காமன்வெல்த் சாதனையுடன் தங்கம் வென்றார். மஹாதேவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இலங்கையின் திலங்கா இஸ்ரு குமாரா, 225 கிலோ துாக்கி வெண்கலம் கைப்பற்றினார்.

Latest Tamil News

வெண்கலம் வென்றார் குருராஜா



இங்கிலாந்தின் பர்மிங்காமில், 22வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. ஆண்களுக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளுதுாக்குதலில் இந்தியா சார்பில் குருராஜா பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சமாக 118 கிலோ துாக்கிய குருராஜா, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 151 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 269 கிலோ பளுதுாக்கிய இவர், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றினார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே 55 கிலோ பளுதுாக்குதலில் இந்தியாவின் சங்கீத் மஹாதேவ் வெள்ளி வென்றிருந்தார்.



வாசகர் கருத்து (2)

  • Balaji Radhakrishnan -

    Congratulations Maha Dev

  • Sampath Kumar - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள் மகா தேவ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்