மும்பையின் அந்தேரியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாவது; பலமுறை மஹாராஷ்டிரா மக்களிடம் நான் கூறியுள்ளேன். குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தவர்களை இங்கிருந்து அனுப்பினால் உங்கள் கைகளில் பணம் இருக்காது. தற்போது, மும்பை நாட்டின் நிதி தலைநகர் எனக்கூறுகிறீர்கள். அவர்களை அனுப்பினால், இனிமேல் மும்பையை நிதி தலைநகரம் என அழைக்க முடியாது. குஜராத்சை சேர்ந்த மார்வாரி சமுதாய மக்கள் எங்கு சென்றாலும், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், பா.ஜ., ஆதரவு பெற்ற முதல்வர் ஆட்சியில் இருக்கும் போது மராத்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கவர்னருக்கு ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடினமாக உழைக்கும் மராத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுய மரியாதை இருந்தால், கவர்னர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி., சுப்ரியா சுலே கூறுகையில், அனைவரையும் சமமாக நடத்த வேண்டியது கவர்னரின் பொறுப்பு. மக்கள் இடையே பகத்சிங் கோஷ்யாரி பிரிவினையை ஏற்படுத்துகிறார். மக்களை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். கவர்னரை உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும். அடிக்கடி டில்லி செல்லும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரில் ஒருவர் அடுத்த முறை டில்லி செல்லும் போது பகத் சிங் கோஷ்யாரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (19)
நாடே அன்னிய முதலீட்டை😇 வரவேற்கிறது. (😋விடியல் கூட இங்கிருந்து 5000 கோடி துபாய்க்கு அனுப்பி அதில் கமிஷன் போக 3000 கோடி யை இங்கு முதலீடு செய்ய வைக்கிறார்)..ஆனால் இவர்களுக்கு அண்டை மாநிலமான குஜராத்திலிருந்து யாரும் தொழில் செய்யக் கூடாதாம். உருப்படுமா?
சிவசேனா எழுப்பும் இதே கூச்சலை திராவிடக் கட்சிகளும் எழுப்பியது உண்டு ...... அதே சமயம் மார்வாடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவை ஹிந்தியில் பிரச்சாரம் செய்ததும் உண்டு ........
மும்பையின் பொருளாதாரம் நிற்பதே குஜராத்திகளால்தான் ...... மும்பையில் வணிக ரீதியாக இருந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும் ......... வேறு விஷயமாக மும்பை போனவர்களுக்கு உண்மை புரிய வாய்ப்பில்லை ..........
.. தமிழ்நாட்டில் இப்பொழுது பலர் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.. ஆனால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு.. லாரி வாங்க, பஸ் வாங்க, புதிய கட்டிடம் கட்ட மற்றும் தனிப்பட்ட மனிதர்களின் பெருமளவு பைனான்ஸ் தேவைகள் பூராவையும் மட்டுமின்றி .. அப்பொழுது தயாரிக்கப்பட்ட சினிமா படங்கள் பலவற்றுக்கும் பைனான்ஸ் செய்தது ... சௌகார்பேட்டை என்ற பகுதியில் வசித்து வந்த மார்வாரிகள் மற்றும் குஜராத்திகள் தான்.. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா பூராவிலும் உள்ள மாநிலங்களில் பல தொழில்களுக்கு நிதி உதவி (வட்டிக்குத்தான்) செய்து தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி உள்ளார்கள்.
கவர்னர்களை கண்காணிக்க வேண்டும் என்கிற நிலைமை உருவாகிறது, கட்சி கூட்டத்தில் பேசுவது போல பேசுகிறார்கள், தனது பதவியின் பெருமை தெரியாதவர்களுக்கு, யார்தான் சொல்லிக்கொடுப்பது ? இவர் விரைவில் நன்றாக வாங்கிக்கட்டி கொள்வார் என்பதில் ஐயம் இல்லை.