ADVERTISEMENT
ராமநாதபுரம் : ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன் போலீசாரால் விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கேணிக்கரை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாக்கப்பட்டன.இதில், ஒரு மொபைல் போனை ஏட்டுகள் சுரேஷ், கமலக்கண்ணன் விற்று பணம் வாங்கியது விசாரணையில் தெரிந்ததால், அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டார்.

இதற்கிடையே, வேறு எந்த பொருட்களையும் விற்றனரா; திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களை விற்றனரா; இதில் எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என விசாரிக்க, ஐ.ஜி., அஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார்.
பறிமுதல் பொருட்களை கண்காணிக்க தவறிய இன்ஸ்பெக்டர் மலைச்சாமியை, உச்சிப்புளிக்கு மாற்றி ஐ.ஜி., உத்தரவிட்டார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஆடிவேல், கேணிக்கரைக்கு மாற்றப்பட்டார்.இதில் தொடர்புடைய அதிகாரிகள் குறித்தும், போலீசார் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்க, எஸ்.பி., தங்கதுரைக்கு, ஐ.ஜி., உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (19)
சஸ்பென்ட்ட கைவிடுங்க டிஸ்மிஸ்ச கைல எடுங்க. நாடே மாறும் . அதுவரை , நாடே நாறும்.
நீங்க வேற sop எல்லாம் soap ஆயிடுச்சி.
விடியல் போலீஸ் செய்யும் பம்மாத்துகளை ஒத்துக் கொள்ள முடியாது.
ஒரு படத்திலே விவேக் வெவ்வேறு வண்டிகள் வாங்கி பிசினெஸ் பண்ணும்போது, காவலர்களால் வண்டி பிடிக்கப்பட்டு காவல் நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, திரும்பவும் விவேக்கிடம் அந்த வண்டியின் பாகங்கள் மட்டுமே கொடுக்கப்படும் காமடிதான் நினைவுக்கு வருகிறது ..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பொதுஜனம் திருடினால் மாதக்கணக்கில்/ வருடக்கணக்கில் சிறைத்தண்டனை, அதுவே காக்கவேண்டிய காவலர்கள் திருடினால் சஸ்பெண்ட்/ இடமாற்றம். நல்லா இருக்கு உங்க ஞாயம். சிங்கப்பூர் மாதிரி இவனுங்களுக்கெல்லாம் கசையடி கொடுக்கும் காலத்தில்தான் நாடு உருப்படும்.