மகளிர் பிரிவில் இருவர் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் மகளிர் 'சி' பிரிவில் இந்திய விராங்கணைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

முதல் சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய அணியின் ‛ஏ' பிரிவினர் ஜிம்பாப்வே அணியினருடனும், ‛பி' பிரிவினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனும், ‛சி' பிரிவினர் தெற்கு சூடானுடனும் மோதுகின்றனர்.
மகளிர் பிரிவில் இந்திய அணியின் ‛ஏ' பிரிவினர் தஜிகிஸ்தானுடனும், ‛பி' பிரிவினர் வேல்ஸ் அணியுடனும், ‛சி' பிரிவினர் ஹாங்காங் அணியுடனும் மோதுகின்றனர்.
முதல் வெற்றி
இன்றைய முதல் சுற்றில் ஓபன் பிரிவு ‛பி' அணியில் விளையாடிய இந்திய வீரர் ரோனக் சத்வானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். இதில், வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கிய சத்வானி, 36வது நகர்த்தலில் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றிப் பெற்றார். இது இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் முதல் வெற்றியாக பதிவானது.
வாசகர் கருத்து (5)
துவக்க விழாவுக்கு வந்தவங்க வந்து போஸ்டர் அடிச்சு மெடல் குத்திக்கிட்டு போயிட்டாங்க. ஒருத்தருக்கும் நிஜமான இண்டரஸ்ட் இருக்கறவங்க மாதிரி தெரியலை. இதுல சொகுசு விமானம், 22000 போலீஸ்னு மக்கள் பணத்தை வாரி இறைச்சு, பார்லிமெண்ட்டுக்குப் போகாம அரசியல் செஸ் வெள்ளாடிட்டுப் போறாங்க. போற வழியெல்லாம் பூவை வாரி இறைச்சு வேஸ்ட். ஒரு பய க்ளீன் பண்ணமாட்டான். அதெல்லாம் சாக்கடையில் அடைச்சுக்கிட்டு நாளைக்கி மழை பெஞ்சா தண்ணீர் போக வழியில்லாம ஊரே நாறும்.
என்ன ஒரு வெறியோடு பாக்குறான்? இவனுங்க இந்த போட்டி நடத்துவதே இதுக்குத்தானா ?
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
இந்த விளையாட்டில் உதயனுக்கு முன் உரிமை வழங்குவதன் காரணம் என்ன? நேற்றும் நேரு அரங்கத்தில் உதயனுக்கு என்று தனி இடம் - பெரிய நபர்களுடன் உட்கார அனுமதி - சதுரங்க காய்களை நகர்த்த அனுமதி இதெல்லாம் வம்சாவளி வாரிசு என்பதற்காகவா? துரைமுருகன் பிள்ளைக்கோ, அல்லது டி ஆர் பாலுவின் பிள்ளைக்கோ அல்லது வேறு எந்த அமைச்சரின் பிள்ளைகளுக்கோ அல்லது கட்சியின் பெரும்புள்ளியின் மைந்தருக்கோ இந்த சலுகை கிடையாதா? இதை கட்சியிலும் யாரும் கேட்க மாட்டார்களா? இதுதானா சமத்துவமா? ஊடகங்களும் வாய்திறக்க மாட்டேங்கிறாங்களே