Load Image
dinamalar telegram
Advertisement

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கிடுக்கிப்பிடி: குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்க தடை


'நீர்நிலைகளில் வீடு, கடை கட்டியோருக்கு குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 'இதன் பிறகும் இணைப்புகள் வழங்கினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பாயும்' என, நீதிமன்றம் எச்சரித்தது. இதன் அடிப்படையில், குடிநீர் வாரியத்திற்கு தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், சட்டவிரோத குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்குவது தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

Latest Tamil News

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 6.83 லட்சம் கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்காக, 3,530 கி.மீ., கழிவு நீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.இங்கு வடியும் கழிவு நீர், 3 முதல் 9 அடி சுற்றளவு உடைய குழாய்கள் வழியாக, கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.
இங்கு, தினமும் 54.90 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு, தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதுடன் ஏரி, கடலில் விடப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, சாலையோரம் மற்றும் நீர்நிலைகளில் வசிப்போருக்கு, மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் பரிந்துரையில் கழிவு நீர் இணைப்பு வழங்கப்பட்டன.

இதற்கு, மின் இணைப்பு உள்ளிட்ட சில ஆவணங்களை, குடிநீர் வாரியம் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், 'நீர்நிலைகளில் வீடு, கடை கட்டியவர்களுக்கு குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்கக்கூடாது' என, உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு பிறப்பித்தது.


'இதன் பிறகும் இணைப்புகள் வழங்கினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மற்றும் குற்ற வழக்கு பாயும்' என, நீதிமன்றம் எச்சரித்தது.இதன் அடிப்படையில், குடிநீர் வாரியத்திற்கு தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.தற்போதும், மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், 'ஏரி, குளம், ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் வசிப்போருக்கு, குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்க வேண்டும்' என, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தொந்தரவு கொடுக்கின்றனர்.
Latest Tamil News

வேலைக்கு உலை



உயர் நீதிமன்றம் மற்றும் அரசால், வேலைக்கே உலை வைக்கும் உத்தரவு என்பதால், குடிநீர் வாரிய அதிகாரிகள், சட்டவிரோத கழிவு நீர் இணைப்பு வழங்குவதை நிறுத்திஉள்ளனர்.சட்டவிரோத கழிவு நீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி, சில கவுன்சிலர்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து உள்ளனர்.

மேலும், சில கவுன்சிலர்கள் குடிநீர், கழிவு நீர் இணைப்பு தருவதாக வாக்குறுதி அளித்து, ஓட்டுகளை கைமாறாக பெற்று உள்ளனர்.சட்டவிரோதமாக குடிநீர், கழிவு நீர் இணைப்பு கேட்கும் கவுன்சிலர்களிடம், நீதிமன்றம் மற்றும் துறை உத்தரவை காட்டி, அதிகாரிகள் விளக்குகின்றனர்.
அதையும் மீறி, இணைப்பு கேட்கும் கவுன்சிலர்களிடம், பயனாளி பெயர், இடம், தெரு பெயர், சர்வே எண் குறிப்பிட்டு, லெட்டர் பேடில் கடிதம் கேட்கின்றனர்.சிலர், வேறு இடத்தின் பட்டா ஆவணங்களை காட்டி, ஆக்கிரமிப்பு இடத்திற்கு இணைப்பு கேட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.இதை, வருவாய் ஆவணங்களை வைத்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுபிடித்து விடுகின்றனர்.


Latest Tamil News

சரிபார்ப்பு



முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில், மணலி, மாதவரம், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 1,597 சர்வே எண்களை அடையாளப்படுத்தி, குடிநீர் வாரியத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.இதில், நீர்நிலை வகைப்பாடு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள மண்டலங்களில் உள்ள நீர்நிலை சர்வே எண்கள் வழங்கப்பட உள்ளன.குடிநீர், கழிவு நீர் இணைப்பு கேட்கும் பயனாளிகள் வழங்கும் ஆவணங்களை, வருவாய் ஆவணங்களை சரிபார்த்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடிநீர் வாரியத்திற்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.இதனால், சட்டவிரோத குடிநீர், கழிவு நீர் இணைப்பு வழங்குவது தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

சவுக்கடி



நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள், குடிநீர், கழிவு நீர் இணைப்பை வைத்து, இடத்தை தக்க வைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நீதிமன்ற உத்தரவால், நீர்நிலைகள் மாசடைவது தடுக்கப்படும். சட்டவிரோத இணைப்பை வைத்து, பணம் சம்பாதிக்க நினைத்த கவுன்சிலர்கள், அரசியல்வாதிகளுக்கு சரியான சவுக்கடி கிடைத்துள்ளது.- நீர்நிலை ஆர்வலர்கள்தொந்தரவு

நீர்நிலைகளில் வசிப்போருக்கு, குடிநீர் இணைப்பு வழங்குவதில்லை. மாறாக, லாரி மற்றும் தொட்டி வைத்து குடிநீர் வாங்கி வருகிறோம். நீதிமன்ற உத்தரவால், கழிவு நீர் இணைப்பு வழங்குவதில்லை. இது தெரிந்தே, ஆதாயத்திற்காக சில கவுன்சிலர்கள் கழிவு நீர் இணைப்பு வழங்க வலியுறுத்துகின்றனர்.

சிலர், உத்தரவை காட்டினால் புரிந்து கொள்கின்றனர். வேறு வகைகளில் தொந்தரவு கொடுப்பவர்கள் குறித்து, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.-குடிநீர் வாரிய அதிகாரிகள்சர்வே எண்களின் வகைப்பாடு

குளம், ஓடை, குட்டை, ஏரி, நீர்ப்பிடிப்பு, ஆறு, கிணறு, ஊற்று, மடுவு, வெட்டுக்குழி, கரை, ஆற்றங்கரை, ஏரி உள்வாய், தாங்கல், தண்டுக்கரை, கால்வாய், தாங்கல்கரை, வாய்க்கால், நீரூற்று, வாய்க்கால், வெட்டுப்பள்ளம் மற்றும் சென்னை நீர்வழித்திட்டப்பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு தரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஆறு மண்டலங்களின் நீர்நிலை சர்வே எண் மொத்த விபரம்:மணலி 523மாதவரம் 437வளசரவாக்கம் 318ஆலந்துார் 25பெருங்குடி 172சோழிங்கநல்லுார் 122மொத்தம் 1,597

வழக்கு பாயும்



குடிநீர், கழிவு நீர் இணைப்பு கேட்கும்போது, சர்வே எண் மற்றும் இருப்பிடம் குறித்து, முறையாக ஆய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு, கடை இல்லை என, பயனாளிகள், வார்டு பொறியாளர் மற்றும் பகுதி பொறியாளர் தனி படிவங்களில் உறுதி அளித்தால் தான், இணைப்பு வழங்கப்படும். இதில், அதிகாரி முறைகேடாக இணைப்பு வழங்கினால், வேலை பறிபோகும். வழக்கும் பாயும்.



வாசகர் கருத்து (8)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    The officers are held responsible for such illegal connections but the councilors, for vote hunting have promised and they are not coming in picture. So the deptofficers should be strict, and in case of pressure, should report to the minister of the portfolio Will they be allowed to work independently?

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    இப்போவாவது கேடு கேட்ட அ.வியாதிகள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம் அதையும் மீறி தொந்தரவு செய்தால், அக்கட்சியின் தலைவருக்கு தண்டனை என்று நீதிமன்றம் அறிவிக்கணும்.

  • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

    இனிமேல் வழக்கு பாய்வது இருக்கட்டும். இதுவரையில் ஆக்கிரமித்த இடங்களை மீட்டு விட்டீர்களா? அந்த ஆக்கிரமிப்பு இடங்களுக்கு குடிநீர் மின்சார இணைப்பு வழங்கிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? இல்லையென்றால், நீதிமன்றங்கள் சும்மா கண்ணாமூச்சி காட்டுகின்றன என்றுதான் அர்த்தம். என்றைக்கு நீதித்துறையும் உருப்படாமல் போய் விட்டதோ அன்றைக்கே நாடும் உருப்படாமல் போய்விடும்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    வள்ளுவர் கோட்டம் நாற போகிறது.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மயிலாப்பூரில் எங்கள் தெருவில் ஒரு இணைப்புவாங்கி அதில் பல வீட்டிற்கு தண்ணீர் சப்ளை ஆகிறது கொடுத்தது வாரிய ஊழியர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement