Load Image
dinamalar telegram
Advertisement

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விக்ராந்த் ; விமானம் தாங்கி போர்க்கப்பல் ரெடி

புதுடில்லி: முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க்கப்பல், நம் கடற்படையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.நம் கடற்படைக்கான விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலை உருவாக்க, 'கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
Latest Tamil News



இந்த கப்பல் கட்டும் பணி 2009ல் துவங்கியது. மொத்தம் 2,300 அறைகளுடன், 1,700 பேர் பயணிக்கக் கூடிய இந்த கப்பல், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.மொத்தம் 860 அடி நீளமும், 203 அடி அகலமும், 194 அடி உயரமும் உடைய இந்த கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 52 கி.மீ., வேகத்தில் பயணிக்கக் கூடியது.மொத்தம் 30 விமானங்களை உடைய விமானப் படைப் பிரிவை இயக்கும் திறன் கொண்ட இந்த கப்பலில், 'மிக் 29கே' போர் விமானம், 'கமோவ் 31, எம்.எச்., 60ஆர்' ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த வாரத்தில் நான்காவது மற்றும் இறுதிக் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக முடித்த விக்ராந்த் கப்பல், அடுத்த மாதம் நம் கடற்படையிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நேற்று ஒப்படைக்கப்பட்டது. நாட்டின், 75வது சுதந்திர தினமான ஆக., 15ல், இந்த கப்பல் நம் படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Tamil News

2 அதிநவீன ஹெலிகாப்டர்கள்: ஒப்படைத்தது அமெரிக்கா!

நீர்மூழ்கி கப்பல் அழிப்பு, போர்க் கப்பல்கள் தகர்ப்பு, சிறப்பு கடல்சார் நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக, எவ்விதமான தட்ப வெப்பநிலையிலும் பயன்படுத்தக் கூடிய பல்திறன் வாய்ந்த, 'எம்.எச்., 60 ரோமியோ' என்ற அதிநவீன 24 ஹெலிகாப்டர்களை வாங்க, அமெரிக்காவின் 'லாக்ஹீடு மார்ட்டின்' நிறுவனத்துடன், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் போடப்பட்டது. முதல்கட்டமாக, 2021ம் ஆண்டு, மூன்று ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவில் வைத்து நம் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றில், நம் கடற்படை வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள், கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டன. இன்னொரு ஹெலிகாப்டர் அடுத்த மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுவரை ஐந்து ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள 19 ஹெலிகாப்டர்கள் 2025க்குள் ஒப்படைக்கப்பட உள்ளன.



வாசகர் கருத்து (3)

  • raja - Cotonou,பெனின்

    வாழ்த்துக்கள் ... மேக் இன் இந்தியா திட்டம் சிறப்பாக செயல் படுகிறது.....இதே காங்கிரசு அரசா இருந்தா ரஸ்யாவிடம் அநியாய விலைக்கு வாங்கி அதில் கமிஷன் அடித்திருப்பார்கள்....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காலக்கட்டத்தில் சுயமாக விமானம் தாங்கிக்கப்பலை உருவாக்கி கடற்படையுடன் இணைத்தது சிறப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்