ADVERTISEMENT
சென்னை : தமிழகம் தான் இந்தியாவில் செஸ் தலைநகரமாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் நடப்பது பெருமையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்களை வரவேற்கிறேன். நேரு உள்விளையாட்டு அரங்கிற்குபன்னாட்டு பெருமை சேர்க்கும் வகையில் விழா அமைந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா மிக எழுச்சியோடு நடந்துள்ளது. குஜராத் முதல்வராக இருந்த போது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர் மோடி.
செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. ஆனால், கோவிட் மற்ற பிரச்னைகளால் நடத்த முடியாமல் போனது. இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழகத்தில் நடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். மார்ச் மாதம் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டேன்.பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய 18 மாதங்கள் ஆகும். ஆனால், தமிழக அரசு 4 மாதங்களில் செய்துள்ளது.இப்போட்டியின் மூலம் தமிழக விளையாட்டு துறை மட்டுமல்ல சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர உள்ளது. தமிழக அரசின் மதிப்பு மேலும் மேலும் உயர உள்ளது. இது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. சரியான திட்டமிடல், கடின உழைப்பு. அதனால் உயர்வு ஏற்பட்டுள்ளது.
துவக்க விழா இங்கு நடந்தாலும் போட்டி முழுமையாக மாமல்லபுரத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.மாமல்லபுரம் இந்திய கட்டடகலையின் அருங்காட்சியகம்.செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.102 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த போட்டியை துவக்கி வைக்க வருகை தந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். கருப்பு வெள்ளை மைதானமாக காட்சி தருவது சதுரங்கம். கீழடியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 2 வகை ஆட்டக்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை செஸ் விளையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
![Latest Tamil News]()
மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகம் தான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது. தமிழகம் தான் இந்தியாவில் செஸ் தலைநகரமாக உள்ளது. தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. நாமெல்லாம் ஒரே குடும்பமாக உள்ளது. ஒரு காலத்தில் அரசர்களின் விளையாட்டாக இருந்தது மக்களின் விளையாட்டாக மாறியுள்ளது. செஸ் அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல. அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டை இந்தியாவில் மேலும் பரவ செய்ய இந்த போட்டி உறுதுணையாக இருக்கும். கல்வியில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும். இதற்கு இந்த போட்டி உறுதுணையாக இருந்திருக்கும். செஸ் ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்த போட்டியை துவக்க நேரில் அழைக்க திட்டமிட்டிருந்தேன். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. நலம் விசாரிக்க தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எனது நிலையை சொன்னேன்.அப்போது மோடி, ஓய்வெடுத்து கொள்ளுங்கள். நிச்சயம் கலந்து கொள்வேன் என்றார். இந்த போட்டி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விழா என்றார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. ஆனால், கோவிட் மற்ற பிரச்னைகளால் நடத்த முடியாமல் போனது. இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழகத்தில் நடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். மார்ச் மாதம் இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டேன்.பன்னாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்ய 18 மாதங்கள் ஆகும். ஆனால், தமிழக அரசு 4 மாதங்களில் செய்துள்ளது.இப்போட்டியின் மூலம் தமிழக விளையாட்டு துறை மட்டுமல்ல சுற்றுலா மற்றும் தொழில்துறை வளர உள்ளது. தமிழக அரசின் மதிப்பு மேலும் மேலும் உயர உள்ளது. இது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. சரியான திட்டமிடல், கடின உழைப்பு. அதனால் உயர்வு ஏற்பட்டுள்ளது.
துவக்க விழா இங்கு நடந்தாலும் போட்டி முழுமையாக மாமல்லபுரத்தில் நடப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.மாமல்லபுரம் இந்திய கட்டடகலையின் அருங்காட்சியகம்.செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த ரூ.102 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இந்த போட்டியை துவக்கி வைக்க வருகை தந்ததற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். கருப்பு வெள்ளை மைதானமாக காட்சி தருவது சதுரங்கம். கீழடியில் ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 2 வகை ஆட்டக்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை செஸ் விளையாட பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். தமிழகம் தான் இந்தியாவின் செஸ் தலைநகரமாக உள்ளது. தமிழகம் தான் இந்தியாவில் செஸ் தலைநகரமாக உள்ளது. தம்பி என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. நாமெல்லாம் ஒரே குடும்பமாக உள்ளது. ஒரு காலத்தில் அரசர்களின் விளையாட்டாக இருந்தது மக்களின் விளையாட்டாக மாறியுள்ளது. செஸ் அதிர்ஷ்டத்தை நம்பிய விளையாட்டு அல்ல. அறிவை நம்பிய விளையாட்டு. இந்த விளையாட்டை இந்தியாவில் மேலும் பரவ செய்ய இந்த போட்டி உறுதுணையாக இருக்கும். கல்வியில் விளையாட்டையும் சேர்க்க வேண்டும். இதற்கு இந்த போட்டி உறுதுணையாக இருந்திருக்கும். செஸ் ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகளை தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பிரதமர் முன் ஒன்றியம் என குறிப்பிட்ட ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் இந்த உரையை துவங்கும் போது, மத்திய அமைச்சர்களை வரவேற்று பேசும் போது ஒன்றிய அமைச்சர் என குறிப்பிட்டார்.
வாசகர் கருத்து (17)
Fantastic work by TN government to bring the Chess Olympiad to Chennai. Great work. The Minister concerned deserves a huge appreciation.
அரசியல் சதுரங்கத்தில் கருப்பு கொடிய காட்டிய பல அல்லக்கைகள் இன்று வெள்ளை கொடிய காட்ட வச்ச பெருமை க்ராண்ட் மாஸ்டர் மோடிஜிக்கு உண்டு...
திராவிட பூஞ்சைகள் இல்லையென்றால் விஸ்வநாதன் ஆனந்த் வெளிநாடுகளில் சாதித்திருக்க முடியுமா?..... இங்கிருந்து அவர் போன்ற பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த பெருமை வெங்காய விழுதுகளையே சாரும்...
போட்டி ரஸ்யாமில் நடக்காததற்கு உக்ரைன் போர் காரணமல்ல... ஹிஹி.... கொரோனாதான் காரணம்.... இதை கண்டு பிடித்த பெருமை ஸ்டாலினை மட்டுமே சாரும்.... ஹிஹிஹி...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பார்த்து பார்த்து படிப்பது ,என்ன பெரிய விஷயமா? பத்தாம் வகுப்பு மாணவன் கூட நன்றாகவே செய்வான்.பார்க்காமல் அழகாக பேசிய மோடி தான் இதயத்தை வென்றார்.