கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கடலூர் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் ஜூலை13ம் தேதி பள்ளியில் இறந்து கிடந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்து வரும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகியோரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஜூலை 26ம் தேதி மனுதாக்கல் செய்தனர்.
வாசகர் கருத்து (6)
அந்த மாணவி எளிதிய கடிதம் ,, பிரேத பரிசோதனை முடிவு ஏன் வெளி வரவில்லை , நம்ம டிஜிபி பள்ளி மீது எந்த குற்றமும் இல்லை என்று சொன்னார் அப்புறம் மாறி விட்டார் , அந்த மாணவியின் பெற்றோர் பணத்துக்கும் அரசு வேலைக்கும் ஆதி போடுகிறார்கள் இது கோர்ட் கு தெரியும் .
While that girl's parents raise their voice about some traces which is suspec that it is a suicide, bail granting may encourage the school management to coax or threaten them to withdraw the case Chidambaram Udayakumar case cannot be forgotten
அந்த பள்ளி ஓனரம்மா பேசுறத பார்த்தா, நீ என்ன கேஸ் வேணா போடு, எதையும் சமாளிக்கத்தயார், என்ற ரேஞ்சில் இருந்தது. அதுக்கு தான் மக்கள் போராட்டதில் பள்ளியில் புகுந்து ஒரு கை பார்த்துவிட்டனர். இந்தியாவில் பணம் இருந்தா கேசில் இருந்து எஸ்கேப்... கிருத்துவ பள்ளிகள், மிஷநரிகள் தப்பு செய்யும் போது, ராம்ஜெத்மாலினி, நளினி சிதம்பரம் போன்ற பெரிய வக்கீல்கள் பலகோடி செலவில் வாதாடி எப்படிப்பட்ட கேசையும் உடைத்து வெளியே கொண்டுவருவார்கள், மூலக்கல் எஸ்கேப் ஆனது இப்படித்தான். இவர்களும், இருக்கிற கோடிகளை வைத்து, நளினி சிதம்பரத்தை அனுகினால், வெற்றி நிச்சயம். ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை, முக்கியமாக ஸ்ரீனிதி போன்ற குழந்தைகள் பல கோடி பண்ணி கோர்ட்டில் போராட வாய்ப்பில்லை... ரோட்டில கார் ஏத்தின கேஸில், 20வருடம் கழித்து சல்மான் இப்பதான் உள்ளே போனாரு, அதுவும் யாரோ நீதிபதி புண்ணியவான், ரோட்டில் தூங்குறவங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டி போராடி தண்டனை கொடுத்துள்ளார், எனவே பணமிருப்பவர்கள் எதற்க்கும் பயப்படத்தேவையில்லை.
இவர்களை ஜாமீனில் விட்டால் வெளியில் இருப்பவர்களுக்கு ஆபத்து ஆகவே சிறையிலேயே கொன்று விடுங்கள்
அந்த மர்மம் முக்கியம்.... கற்பழிப்பு என்பதை கோர்ட் முடிவு செய்யும்....அதுவரை மர்மம்.... ஓகே..