தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள மின் வாரியம், இதற்கான பரிந்துரையை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது. இதை முடிவு செய்யும் அதிகாரத்திலும், பொறுப்பிலும் ஆணையமே உள்ளது.வழக்கமாக இதுபோன்ற பரிந்துரை வரும்போது, மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு, அதன்பின்பு ஆணையமே மின் கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கும். இதில் மின் வாரியம் பரிந்துரைக்கும் மின் கட்டணத்தை, ஆணையம் அப்படியே ஏற்கலாம் அல்லது அதைக் குறைக்கலாம்; இல்லாவிடில், முற்றிலுமாகவே நிராகரிக்கலாம். இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தில் பெரும் குழப்பங்கள் உள்ளன.
தமிழகத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறைதான் மின் கட்டண பில் கணக்கிடப்படுகிறது. ஆனால் மின் அளவீட்டை இரு மாதங்களுக்குக் கூறி விட்டு, உயர்த்தப்படும் கட்டணத்தை ஒரு மாதமாகக் குறைத்துச் சொல்லி, மக்களை ஏமாற்றியுள்ளது மின் வாரியம். உதாரணமாக, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மாதத்துக்கு ரூ.297.50 வீதமாக ஒரு பில்லில் ரூ.595 கட்டணம் உயரவுள்ளது. ஆனால் ரூ.595 கட்டணம் உயருமென்று கூறாமல், மாதத்துக்கு ரூ.297.50 மட்டும் உயர்வதாகக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, 600, 700, 800 மற்றும் 900 யூனிட்களைப் பயன்படுத்துவோருக்கு, முறையே ரூ.310, ரூ.550, ரூ.790 மற்றும் ரூ.1130 என்ற அளவில், இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, குறைந்தபட்சம் 13 சதவீதத்திலிருந்து 53 சதவீதம் வரை கட்டணம் உயர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பில்லில் உயரும் தொகையில் பாதித் தொகையை மட்டும் குறிப்பிட்டு, 'மாதத்துக்கு' என்ற வார்த்தையை சாதுர்யமாகச் சேர்த்துள்ளது மின் வாரியம்.இதனால், ஆணையம் சார்பில் மக்கள் கருத்துக் கேட்கப்படும்போது, இதற்குக் கடும் எதிர்ப்பு வர வாய்ப்பு அதிகம். ஆணையம் இதுவரை இறுதி முடிவு எடுக்காத நிலையில், மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு பேனர்கள், அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்து விட்டதோ என்ற குழப்பத்தையும், அதிருப்தியையும் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
-நமது சிறப்பு நிருபர்-
வாசகர் கருத்து (16)
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தைக் கூட்ட வலியுறுத்தியதே இந்த ஆணையம் தானே, அப்புறம் என்ன புண்ணாக்கு முன் அனுமதி?
இது தான் திராவிட மடியல் ஆட்சி இந்த மடியல் ஆட்சியில் விடியாது ஆனால் கொத்தடிமைகள் அல்லக்கைகள் பகோடாஸ்கள் இவர்கள் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள் தமிழகத்தில் ஏன் மின்கட்டணம் உயர்வு என்று கேட்டால் மற்ற மாநிலங்களை விட குறைவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் மின்சாரதுறை அமைச்சராக உள்ளவர் மோடி அரசு உயர்த்த சொன்னதால் உயர்த்தினோம் என்கிறார் செய்தியை ஆணையம் செய்தி வேறு மாதிரியாக இருக்கிறது துக்ளக் முதல்வர் எதற்கும் பதில் சொல்லாமல் ஐ டோன் கேர் என்கிறார் ஆனால் அடிமைகள் கொத்தடிமைகள் தேசவிரோத கூட்டங்கள் வாங்கிய காசுக்கு மேல கூவுது இந்த ஆட்சி நல்லாட்சி என்று இறைவன் தான் தமிழகத்தை நல்லவர்கள் ஆட்சிக்கு வந்து நல்லது நடக்க அருள் புரிய வேண்டும்.
ஒரு நரியை அணில் என்று வர்ணித்த அண்ணாமலைக்கு கண்டனம் ..
அடாவடி தனதின் உச்சம் என எழுத எந்த ஊடகளாரணுக்கும் திராணி இல்லை என்பதை இந்த திராவிட மாடல் அரசுக்கு நன்கு புரிந்திருக்கிறது.
அறிவுப்பு வர்றதுக்கு முன்னாடியே அணிலு .....