Load Image
dinamalar telegram
Advertisement

செந்தில் பாலாஜிக்கு சிறை உறுதி: அண்ணாமலை ஆரூடம்

Tamil News
ADVERTISEMENT
கரூர்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது: திமுக.,வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை ஏற்றியுள்ளனர். கரூரை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின்கட்டண உயர்வினை ஏற்படுத்தியுள்ளார். ஏன் மின் கட்டணம் உயர்வினை உயர்த்தினீர்கள் என்று கேட்டால், மோடி சொன்னாரு நாங்கள் செஞ்சோம் என கூறுகிறார். அதிகமாக பொய் சொல்லும் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும். தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும்.
Latest Tamil Newsகடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர், செந்தில்பாலாஜியை போல யாரும் இல்லை என்று புகழ்ந்துள்ளார். காரணம் கோபாலபுரத்திற்கு வரும் டாஸ்மாக் வருமானம், மின் துறை மூலம் தனியார் நிறுவனம் மூலம் வரும் கோடிக்கணக்கான வருமானம், டாஸ்மாக் மூலம் ஆண்டு வருமானம் பல கோடிகள் வருகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் சிறையில் உள்ளனர். செந்தில்பாலாஜி இப்போதே சிறை செல்ல தயாராகி கொள்ள வேண்டும். செந்தில்பாலாஜிக்கு சிறை உறுதி. அப்போது எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் என்று பார்க்கலாம். ஏற்கனவே 5 கட்சிகளுக்கு சென்ற செந்தில்பாலாஜி, சிறைக்கு சென்ற பின்னர் 6வது கட்சிக்கு மாறுவார்.

கரூர் மாவட்ட மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜியின் எண்ணம். அப்போதுதான் தேர்தலுக்கு தேர்தல் அவர்களுக்கு 1000, 2000 ரூபாய் பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்க முடியும். அதன் பிறகு மீண்டும் அவர்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவதே இலக்கு. ஏழை மக்களுக்காக பா.ஜ., எப்போதும் உடன் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (33)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மிஸ்டர். அண்ணாமலை, அவர் உங்கள் வருங்கால கூட்டணி கட்சி மந்திரி. ஞாபகம் இருக்கட்டும். எது, இது மக்களை திசை திருப்ப பேசும் வெற்று பேச்சா? ஓ, வழக்கமான காமெடியா? அப்ப சரி.

 • முருகன் -

  மத்திய அரசு விலைவாசியை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்குமா . அதற்கு உதவ முடியுமா உங்களால்

 • 2ஆம் ஸ்டிக்கர் மன்னன் - karnataka,இந்தியா

  பூனைக்கு இல்லை இல்லை அணிலுக்கு மணி கட்டுவது யார்?

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  அதுதான் உச்ச நீதிமன்றமே இன்றைக்கு தீர்ப்பு சொல்லிடுத்தே - அமலாக்க துறைக்கு கைது செய்ய முழு அதிகாரமும் உண்டுன்னு. இனிமேதான் தமிழகத்தில் விளையாட்டு ஆரம்பிக்கப் போகுது. அடுத்த தேர்தலில் திமுக BJP கூட்டணி அமைத்து BJP க்கு 15 சீட்டுக்கள் கொடுத்தால் கூட ஆச்சர்ய படுவதற்கு இல்லை

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  ஒரு நேர்மையான அதிகாரி, ஆட்டுக்குட்டி மேய்த்து அதில் வரக்கூடிய வருமானத்தில் குடும்பம் நடத்தியவர், அரவக்குறிச்சி தேர்தலில் ரூ.1000 வாக்காளர்களுக்கு கொடுத்தார் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement