Load Image
Advertisement

திராவிட மாடல் ஆட்சிக்கு காரணம் கிறிஸ்தவர்கள் தான்: சபாநாயகர் அப்பாவு பேச்சு: ஹிந்துக்கள் கொதிப்பு

Tamil News
ADVERTISEMENT
திருச்சி: திராவிட மாடல் என சொல்லுகின்ற இந்த அரசுக்கு முழு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும், பாதிரியர்களும் தான் என சபாநாயகர் அப்பாவு பேசியுள்ளது ஹிந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


துாய பவுல் குருத்துவ கல்லுாரியின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அந்த வீ டியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் அப்பாவு பேசியதாவது:

பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த சட்டங்களால், அனைவருக்கும் கல்வி கிடைத்தது.தமிழுக்கு தொண்டாற்றிய கால்டுவெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர் போன்றவர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. திருச்சபைகள், ஒருவருக்கொருவர் அன்பாக இருக்க வேண்டும் என்று தான் கூறுகின்றன. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அனைத்து மதத்தினவரும் கல்வி கற்று, உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளனர்.

Latest Tamil News


தமிழகம் கல்வியில் உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் கத்தோலிக்க கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள். உங்கள் உழைப்பு தான்.அருட் தந்தையர்கள் அருட்சகோதரிகள், சகோதரர்கள், அவர்கள் இல்லையென்றால், நீங்கள் திரும்பி பார்த்தால், பீஹார் போல் தமிழகமும் இருந்திருக்கும். இதையெல்லாம் தாண்டி உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என்னை உருவாக்கி இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க தந்தையர்கள், கத்தோலிக்க சகோதரிகள். இந்த அரசும் நான் அடிக்கடி சொல்வேன், இந்த அரசு உங்கள் அரசு உங்களால் உருவாக்கப்பட்ட அரசு நீங்கள் பட்டினியாக இருந்து உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் ஆண்டவரிடம் வேண்டி விரும்பி கொண்டு வரப்பட்ட அரசு. இந்த அரசு உங்களுக்கான அரசு.


இந்த சமூக நீதி திராவிட மாடல் என்று சொல்லுகின்ற இந்த அரசுக்கு, முழு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தான், கிறிஸ்தவ பாதிரியர்கள் தான்.அனைத்து ஆயர்களிடமும் நான் பல முறை சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. நீங்களே முடிவெடுத்து உங்கள் பிரச்னைகள் என்ன என்பதை எண்ணி ஆராய்ந்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக மறுக்க மாட்டார். மறுதலிக்க மாட்டார். காரணம், உங்களால் உருவாக்கப்பட்ட அரசு என்பது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். உங்கள் அரசு உங்கள் முதல்வர். நீங்கள் சென்று தைரியமாக உங்களது கோரிக்கைகளை வைத்து காலம் தாழ்த்தாமல் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன். தம்பி இனிகோ இருக்கிறார். பீட்டர் அல்போன்ஸ் இருக்கிறார்.


தமிழக வளர்ச்சியில் உங்களை நீக்கிவிட்டால், வளர்ச்சி ஒன்றுமே இல்லை. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவ மதபோதர்கள் என்று சொன்னாலும், சமூக நீதியில் திராவிடத்தில் உயர்ந்து நிற்கிறது என்றால் அது உங்கள் உழைப்பு தான். நீங்கள் தான் அஸ்திவார கற்கள். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இந்த தமிழகம், இன்றைய தமிழகம். இவ்வாறு அப்பாவு பேசினார்.


சபாநாயகர் அப்பாவுவின் இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர், அப்பாவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதனை பார்த்த பலர், சபாநாயகரை விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (279)

 • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

  இது தான் திராவிட நாடு... பிறமதத்தினர் இப்படி பேசுவது தவிறில்லை ஆனால் ஒரு அவைத்தலைவர் தமிழக மக்கள் 7 கோடி கெருக்கும் நடு நிலையாக இருபார் என மக்கள் நம்பத்தகுந்தவராக வாழ வேண்டும் ஒரு ஜனாதிபதி எப்படு நாட்டுக்கோ அதேபோல் 7 கோடி தமிழருக்கும் ஒரு நடு நியாளராக் இருக்க வேண்டிய இடத்தில் இவரை திராவிட இயக்கம் வைதுள்ளது.. முதல்வருக்கும் மேலே.. அப்படிப்பட்ட ஒருவர் இவர்கள் ஆட்சிக்கு என்று தனிப்பட்ட திமுக என தன்னை கூறிகொண்டு கிருத்தவர்களால் தான் இவர் பதவிக்கு வந்தார் என்று தபட்டம் அடிப்பது பிற மதத்தினர் இஸ்லாமியர், கிருத்தவர் ( கத்தோலிக்க முறை தவிர்த்து) அதிக மக்கள் வாக்கு 80% இந்துக்கள் என (முதல் வரே அறீவித்துள்லார்) மார் தட்டிகொள்ளும் இயக்கம் திமுக.. 7 கோடி மக்களின் வாக்குகளால் தான் இவர் இந்த நடுநிலை அவைத்தாலைவர் பதவிக்கு ஒரு மனதாக நியமிக்கப்பட்டவர் இந்த பத்விக்கு இனி மேல் ஒரு நொடி கூட தகுதி இல்லை இவரிடம் பிற மதத்தினர் இஸ்லாமியர், கிருத்தவர் (கத்தோலிக்க முறை தவிர்த்து) அதிக மக்கள் வாக்கு 80% இந்துக்கள் என் யாரும்நடு நிலை எதிர் பார்க முடியாது என்பதனை தெளிவாக்கியுள்ளார்

 • duruvasar - indraprastham,இந்தியா

  அய்யா அந்த குருவி ரொட்டியையும் குச்சி மிட்டாய்யையும் மறந்துட்டீங்கள்

 • duruvasar - indraprastham,இந்தியா

  எதெதையோ வரிசைபடுத்தினங்க அய்யா. இந்த ரொட்டியும் பிஸ்கோதும் குடுத்ததை சொல்லாம உட்டுடீங்களே. இது ரொம்ப முக்கியம்.

 • Naga Subramanian - Kolkatta,இந்தியா

  எல்லாம் நம் தலை எழுத்து. இந்த மாதிரி கண்ராவியையெல்லாம் பாக்கணும்ன்னு. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதுல மதச்சார்பின்மை என கூறிக்கொண்டு, இந்த மாதிரியான, மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் பேரிழிவுக் கூட்டங்கள்.

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  மக்களே இந்த வெள்ளைக்கார அடிமைகளையும், அவன் சூழ்ச்சியையும் புரிந்து கொள்ளுங்கள் ..வெள்ளைக்காரன் தான் கல்வியை வளர்த்தானாம். 1901 ஆண்டு இந்தியாவில் கல்வி அறிவு 5 சதம் ..அப்போது சென்னை மாகாணத்தில் ஆண்கள் கல்வி 11 சதம், பெண்கள் கல்வி வெறும் 1.1 சதம் ..சுதந்திரத்தின் போது இந்தியாவில் கல்வி அறிவு 14 சதம் ...இந்த மத மாற்றிகள்தான் தமிழனுக்கு கல்வி கொடுத்தார்களாம் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement