Load Image
dinamalar telegram
Advertisement

மின்கட்டண உயர்வைக் கண்டித்து பல்வேறு இடங்களில் அதிமுக., ஆர்ப்பாட்டம்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து, அதிமுக.,வினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று (ஜூலை 25) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Latest Tamil News
இதே போல், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையிலும், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையிலும், மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் ராஜூ, உதயகுமார் தலைமையிலும், ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலும், திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையிலும் , திருப்பூரில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து (12)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    அதிமுக போராட்டம் நியாயம் ஆனது. திமுக போராட்டம் போல அல்ல.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஏன் இப்படி மக்கள் 'அனாவசியமாக' மின்கட்டண உயர்வு என்று போராட்டம் செய்கிறார்கள்? நாங்கள்தான் காரணத்தை மறைமுகமாக கூறிவிட்டோமே - ஆம், பேனாவுக்கு சிலை வைக்கவேண்டும் என்று. பணத்துக்கு எங்கே போவது? ஏன் மக்களுக்கு இது புரிவதில்லை? அடுத்து கருணாதி அணிந்திருந்த கருப்பு கண்ணாடிக்கு ஒரு சிலை வைப்போம். அதன் பிறகு கட்டுமரத்துக்கு ஒரு சிலை வைக்கப்போகிறோம். அவற்றுக்கெல்லாம் நிதி திரட்ட, மேலும் பல்வேறு மக்கள் வாங்கும் பண்டங்களின் விலையை ஏற்றப்போகிறோம். அப்படி இருக்க, இப்பவே இந்த போராட்டம் எதற்கு?

  • krish - chennai,இந்தியா

    அரசு சொத்துவரி, மின் கட்டணம், நெய், வெண்ணை போன்ற பொருள்களின் விலை உயர்வை ஐந்து சதவிகித உச்ச வரம்பில் கட்டுப்படுத்தினால், தற்சமய, இக்கட்டான பொருளாதார மந்த சூழ்நிலையில், மக்களுக்கு வரிசுமை சகித்துக்கொள்ள முடிவதாக இருக்கக்கூடும். அரசு சிந்தனைக்கு, செயல் ஆக்கத்திற்கு.....

  • ThiaguK - Madurai,இந்தியா

    எல்லாம் லூலூ கட்டளைப்படிதான் ..இன்னொரு ஈசன் உத்திரவுப்படிதான் ...அதிகார மய்யம் பல இடங்களில் இருந்து இயக்குது

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    பாஸ் அமெரிக்கால இதை விட விலை அதிகம், பாலும் தேனும் ஓடும் ஆட்சியில் sangis சதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்