Load Image
Advertisement

பள்ளி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Tamil News
ADVERTISEMENT

திருவள்ளூர்: திருவள்ளூரில், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் விடுதியில் பிளஸ் 12 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


திருத்தணி மாவட்டம் தெக்களூரை சேர்ந்த சரளா (17). இவர், திருவள்ளூர் மாவட்டம் மப்பெடு அருகே உள்ள கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் அரசு உதவி பெறும் பள்ளியில், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சொந்தமான செயின்ட் ஆன்ஸ் ஹோம் பார் சில்ரன் என்ற விடுதியில் தங்கி இருந்தார். இன்று காலை நண்பர்கள் உணவு அருந்த சென்ற பின் தனது அறையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் அளிக்காத காரணத்தால், மாணவியின் உறவினர்கள், திருத்தணி சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மறியலை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவியின் உடல் பிரதே பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலையை தொடர்ந்து, இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (13)

  • செந்தில் திருச்சி -

    தினமலர் தான் பள்ளிக்கூடத்தின் பெயரை போடுகிறது ~ மற்ற தமிழ் சேனல்ஸ் பள்ளிக்கூடத்தின் பெயர் போட வில்லை ~ கணியமூர் பள்ளிக்கூடத்தை நிர்வாகத்தை குறை சொன்னவர்கள் இதுக்கு என்ன சொல்லுவார்கள் ~ அது rss பள்ளி கூடம் என்றார்கள் இப்போ இது எந்த பள்ளிக்கூடம் ~

  • jayvee - chennai,இந்தியா

    RSB மீடியாக்கள் இதை பற்றி பேச யோசிப்பார்கள். மிஷனரி மாமூல் கிடைக்காதே

  • vadivelu - thenkaasi,இந்தியா

    ஒன்றும் கண்டுக்க படாது, போராளிகள் ஒளிந்து கொண்டு விடுவார்கள்.என்னமோ ராசா இவிங்களுக்கு ராசி யோகமா கீது. ஒரு பய விவாதம் நடத்தமாட்டார்..

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    மாணவிகளின் தொடர் துர்மரணங்கள் இனியும் தொடர்ந்தால் அது தமிழகத்தில் பெண்கல்வியை கேள்விக்குறியாகிவிடும்... ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ரகசியமாகவாவது பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்....

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மாணவியின் தற்கொலைக்கடிதம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து முதலில் அதைக்கைப்பற்றிய பிறகுதான் போலீஸ், பெற்றவர்களுக்கு செய்தி போகும் . நிர்வாகத்தை அரசு ஒன்றும் செய்யாது, பள்ளிக்கு நாலுநாள் விடுமுறை, அவ்வளவுதான். தினம் தினம் இந்த ந்யூஸ் என்றால் பத்தோடு பதினொன்றாகிவிடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement