ADVERTISEMENT
கடம்பத்துார் : கடம்பத்துார் ஊராட்சியில், மாற்றி இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டப்படாததால் மாணவர்கள் கல்வி கற்க, கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்களுக்கு எப்போது விடியல் கிடைக்கும் என, பெற்றோரிடையே கேள்வி எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெண்மனம்புதுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக்கல்வியில் 150 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். மூன்று ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர் என, நான்கு பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பள்ளியின் வடக்கு பக்கத்தில் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்ற, ஒன்றியக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடத்திற்கு பதிலாக, கிழக்கு புறத்தில் இருந்த வகுப்பறை கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இது மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டதால், 150 மாணவர்களும், இரண்டு வகுப்பறையிலும் பள்ளி வராண்டாவிலும், அருகில் உள்ள உயர் நிலைப் பள்ளி விழா மேடை, அங்கன்வாடி மற்றும் கோவில் வளாகத்திலும் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இதனால் மாணவ - மாணவியர் வெயில், மழையால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு, ஏழு மாதங்கள் ஆகியும் இதுவரை புதிய கட்டடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும் இடித்து அகற்ற, ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பள்ளிக் கட்டடம் இடிக்கப்படவில்லை.இது குறித்து, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல், வெங்கத்துார் ஊராட்சி, பட்டரை அரசு நடுநிலைப் பள்ளியிலும் இடித்து அகற்றப்பட்ட வகுப்பறை கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டப்படாததால், மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து, பள்ளி மாணவர்களுக்கு விடியல் ஏற்படும் வகையில், கூடுதல் வகுப்பறை கட்டுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
பெயர் குறிப்பிடாத கடம்பத்துார் ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'அரசிடமிருந்து அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தவுடன் வகுப்பறை கட்டடம் கட்ட தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
வாசகர் கருத்து (19)
ரொம்ப விவரமானவங்க நம் அதிகாரிகள் அவுங்களுக்கு அண்ணா விருது கொடுத்துகவுரவிக்க்கணும்
ஆயிரம் ஆண்டுக்கு முன் கட்டிய கோவில்கள் இன்னும் இருக்கிறது - ஆனால் இந்த பாழாய்ப்போன திராவிடமடத்தினர் ஆட்சியில் கட்டிய கட்டிடங்கள் 40 ஆண்டுகளுக்குள் பல்லிளித்து விடுகிறது. இவர்களுக்கும் ஓட்டுப்போட்ட மேதைகளைத்தான் சொல்ல வேண்டும்...
கஷ்டப்பட்டு படித்தால்தான் நன்கு வரமுடியும். அமெரிக்காவில் எல்லாப் பள்ளிகளிலும் ஏ.சி, சத்தான ஃப்ரீ உணவு, ஃப்ரீயான கல்வி ந்னு குடுத்தாலும் நிறைய பேர் தேற மாட்டேங்குறாங்க. நீங்களாவது நல்லா படிச்சு நல்லா வாங்க. வருவீங்க.
கட்டும் செலவை அந்த அதிகாரியிடம் வசூலிக்க வேண்டும ,சம்பளத்தில் பிடிக்க வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்திற்கு பதில், மாற்று கட்டடம் கட்டிதர வக்கில்லை இந்த திமுக அரசுக்கு. ஆனால் மக்கள் வரிப்பணத்தை வீணாக ஒன்றுக்குமே உதவாத ஒரு பேனா சிலைக்கு செலவிடப்போகிறார்கள். மாணவர்களே, மக்களே, பேனா சிலையை நிறுவவிடாதீர்கள்.