தேசியக்கொடி இரவிலும் பறக்கலாம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
புதுடில்லி-'நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு, தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'தேசியக்கொடியை காலை 7:30 மணி முதல் ஏற்றலாம்; மாலை 6:00 மணிக்குள் இறக்கி விட வேண்டும். தேசியக் கொடியை கைகளால், காதி துணியில்தான் தயாரிக்க வேண்டும்' என்ற விதிமுறைகளில் அரசு மாற்றம் செய்துள்ளது.மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம். மேலும், இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம். வரும் ஆக., 15ல் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினம், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் 'வீடு தோறும் மூவர்ணக்கொடி' என்ற பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 'தேசியக்கொடியை காலை 7:30 மணி முதல் ஏற்றலாம்; மாலை 6:00 மணிக்குள் இறக்கி விட வேண்டும். தேசியக் கொடியை கைகளால், காதி துணியில்தான் தயாரிக்க வேண்டும்' என்ற விதிமுறைகளில் அரசு மாற்றம் செய்துள்ளது.மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலர்களுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், தேசியக் கொடியை இரவிலும் பறக்க விடலாம். மேலும், இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பருத்தி, பாலியஸ்டர், பட்டு, காதி துணிகளால் ஆன தேசியக்கொடிகளையும் பயன்படுத்தலாம். வரும் ஆக., 15ல் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் கண்டிப்பாக தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
today is 24/7, it is apt to announce that our flag can be on 24 hours
நாடு மெல்ல மெல்ல அமெரிக்கா மாடலாயிட்டு வருது. அங்கு ஜெட்டி, செருப்பில் கூட அமெரிக்க கொடி டிசைன் இருக்கும். கூடிய சீக்கிரம் அதுவும் இங்கே வந்துரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எழுப்பத்தாரல்லவா?