
இதனால் உற்சாகம் அடைந்துள்ள பழனிசாமி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, டில்லி சென்றுள்ளார். சில நாட்கள் டில்லியில் தங்கியிருக்க முடிவு செய்துள்ள பழனிசாமி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
வரும், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால், அ.தி.மு.க., ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது. பழனிசாமி - - பன்னீர்செல்வம் மோதல் ஏற்பட்ட உடனேயே, பிரச்னைகளை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளுமாறு, இரு தரப்பையும் பா.ஜ., மேலிடம் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் டில்லி சென்றுள்ள பழனிசாமியை நேற்றிரவு வரை, மோடியும், அமித்ஷாவும் சந்திக்கவில்லை. ஆனாலும், மோடி, அமித்ஷா தரப்பில் சிலர், பழனிசாமியை சந்தித்துப் பேசியுள்ளனர். 'தினகரன் கட்சியால், சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பாதித்தது. இப்போது மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டால், தி.மு.க.,வுக்கு தான் லாபம். எனவே, ஒற்றுமையாக செயல்படுங்கள்' என பழனிசாமியிடம் கூறியதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.
'இனி இரட்டை தலைமை சரிவராது. பன்னீர்செல்வத்திற்கு வெறும் இரண்டு சதவீத ஆதரவு மட்டுமே உள்ளது. அவர் தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுகிறார். 'அவரால் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படுத்த முடியாது. அவருடன் மீண்டும் இணைந்து செயல்படுவது என்பது சாத்தியமல்ல' என்று பழனிசாமி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.தன் ஆதரவு முன்னாள் அமைச்சர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித் துறை, அமலாக்கத் துறை நடத்தும் சோதனைகள் குறித்தும், பா.ஜ., தலைவர்களிடம் பழனிசாமி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி, தன் ஆதரவாளர்களிடம் பேசிய பழனிசாமி, 'மோடியும், அமித்ஷாவும் அ.தி.மு.க., என்ற கட்சியைத் தான் ஆதரிப்பர். 'தனி நபர்களை ஆதரிக்க மாட்டார்கள். வருமான வரி சோதனைகள் எல்லாம் தற்காலிகமானவை' எனக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசகர் கருத்து (30)
வருமானவரி சோதனைகள் எல்லாம் தற்காலிகமானது தான்.. அட அட... அட... என்ன ஒரு ஜனநாயகம்?? என்ன ஒரு ஊழல் எதிர்ப்பு கொள்கை? என்ன ஒரு அரசிலே தார்மீகம்? இவனேயல்லாம் நம்பி ஒரு நாடு போவதை நினைச்சா தான் ரொம்ப கஷ்டமா இருக்கு
அதிமுகவை பிஜேபி என்று மாற்றி தேர்தலில் உங்களால் வெற்றி பெறமுடியுமா?
பழனிசாமி அதிமுக காரரா?. பிஜேபிக்காரரா? மோடி அதிமுக காரரா?. பிஜேபிக்காரரா?. தங்கள் கட்சியை பற்றி மற்றகட்சிக்காரர்களிடம் புகார் அளிப்பானேன் ?., பிஜேபிக்காரர்கள் அதிமுகவை பற்றி கவலைப்படுவானேன் ?.
அப்போ நீங்க எல்லாம் எவ்வளவு கொள்ளை அடித்து இருந்தாலும் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக இருந்தால் உங்கள் மீது சி பி ஐ வருமான வரி போன்ற இயக்கங்கள் (இனி அப்படிதான் அழைக்கவேண்டும் போல ) உங்கள் மீது நடவடிக்கை எடுக்காது அப்படித்தானே ?
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
வருமான வரி சோதனைகள் தாற்காலிகமானது தான் அடப்பாவிகளா?? மூணு கண்டைனர் லாரி நிறைய கட்டு கட்டா பணம் பிடித்தார்கள் அதையே வருமானவரித்துறை தற்காலிகமான விஷயமா மாற்றியவர்கள் மோடி அரசில் எதுவும் சாத்தியம் சுட சுட புத்தம்புதிய ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் நேரடியாக அரசு அச்சகத்தில் இருந்து சேகர் ரெட்டி கையில் வந்து சேர்ந்தது. அதையே தற்காலிகமான வழக்கா மாற்றிய புண்ணியவான்கள்.. இந்த ஆசாமிகள் அரசு நடத்தும் களவாணிகள்.. அரசியலை இப்படி தன நடத்துவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நாட்டை சீர்கெடுக்கும் நபும்சகர்கள்.