Load Image
dinamalar telegram
Advertisement

தமிழக எம்.பி.,க்கள் செயல்பாடு; முதல்வர் ஆய்வு செய்வாரா?

பார்லிமென்டில் தமிழக எம்.பி.,க்களின் செயல்பாடுகள், சபைகளை முடக்குவதாகவே உள்ளது. இதை கைவிட்டு, தமிழக நலனுக்காக குரல் கொடுக்கும்படி, 57 எம்.பி.,க்களுடன் ஆய்வு செய்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு




கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், 38ல் தி.மு.க., கூட்டணி வென்றது. தற்போது, பார்லிமென்டில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் எம்.பி.,க்களாக உள்ளனர். இதில், 39 பேர் லோக்சபாவிலும், 18 பேர் ராஜ்ய சபாவிலும் எம்.பி.,க்களாக உள்ளனர்.


இதில், தி.மு.க.,வுக்கு மட்டும், 34 பேர் உள்ளனர். இவர்கள் தமிழகத்தின் நலனுக்காக என்ன செய்துள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. பார்லிமென்டில், மாநிலத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, வளர்ச்சி திட்டங்களுக்காக, மத்திய - மாநில அரசுகள் இடையேயான பிரச்னைகளுக்கு தீர்வு காண, இவர்கள் எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை.நாட்டின் பாதுகாப்பு பிரச்னை, வளர்ச்சிக்காக வாதிடவில்லை.


இலங்கை பிரச்னை, அங்குள்ள தமிழர்களின் நலன் தொடர்பாகவும் எந்த வாதத்திலும் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால், தேவையில்லாத பிரச்னைகளில் சபைகளை முடக்குவதில் மட்டுமே தமிழக எம்.பி.,க்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள், பழனிசாமி, பன்னீர்செல்வம் கோஷ்டியாக செயல்படுகின்றனர். அவர்களும் தமிழக பிரச்னைகள் குறித்து எதுவும் வாய் திறப்பதில்லை.


இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா, இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களும் தமிழகத்துக்காக பெரிதாக வாதிட்டதில்லை.மூத்த தலைவர் சிதம்பரம் உட்பட காங்கிரசுக்கு, ஒன்பது எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள், கோஷ்டிகளாகப் பிரிந்து, எதிர் எதிர் திசைகளில் செயல்பட்டு வருகின்றனர்.இவ்வாறு தமிழகத்தைச் சேர்ந்த 57 எம்.பி.,க்களும், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு பெரிய அளவில் எந்த சாதனையும் செய்யவில்லை.


அடுத்துள்ள இரண்டு ஆண்டுகளில் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை பெறுவது, தமிழக நலன்களை பார்லிமென்டில் எதிரொலிக்கச் செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இதற்காக, இந்த எம்.பி.,க்களை அழைத்து, அவர்களுடன் ஸ்டாலின் விவாதிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

மக்களின் விருப்பம்




செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பல மாநிலங்களில் பல்கலைகள் திறக்க உள்ளனர். தமிழகத்திலும் இது அமைய வேண்டும். அதுபோல, ராணுவ தொழிற்பூங்கா அமைப்பது போன்ற திட்டங்களை தமிழகத்தில் விரைவில் செயல்படுத்துவதற்கு இந்த எம்.பி.,க்களின் உதவியை, முதல்வர் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும் உள்ளது.




- புதுடில்லி நிருபர் -



வாசகர் கருத்து (1)

  • Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா

    நமது எம்.பி.க்கள் எதுவுமே செய்யவில்லையென இப்பிடி ஒரேயடியாக பேசக்கூடாது. அழகாக உடை அணிந்து சபைக்கு வரும் உறுப்பினர்களுக்கு பரிசு என்ற போட்டியில் கனிமொழி, கார்த்தி சிதம்பரம், விஷ்ணு பிரசாத் இவர்கள் முன்னிலையில் உள்ளார்களாம். தில்லியிலிருந்து பரிசும், விருதும் வாங்குவது திராவிடச் செயல்பாட்டுக்கு கட்டியம் கூறாதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement