Load Image
dinamalar telegram
Advertisement

விமானத்தில் மயங்கிய பயணி: முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பாராட்டு குவிகிறது

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் இருந்து ஐ தராபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்தார். அந்த விமானத்திலேயே பயணம் செய்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தார். இதற்கு பலர் பாராட்டு தெரிவித்தனர்.


டில்லியில் இருந்து தெலுங்கானா தலைநகர் ஐ தராபாத்திற்கு தனியார் விமானம் சென்றது. அதில், தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசையும் பயணித்தார்.


நடுவானில் விமானம் பயணித்து கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியவில், விமான பணிப்பெண் ஒருவர், 'விமானத்தில் டாக்டர் யாரேனும் உள்ளீர்களா ? பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்' எனக்கூறினார். உடனடியாக தமிழிசை எழுந்து, அந்த பயணி அருகே சென்றார். அவர், வியர்த்த நிலையில் மயங்கிய நிலையில் கிடந்தார். சற்றும் தாமதிக்காமல் அவருக்கு சிகிச்சை அளித்த தமிழிசை, அந்த பயணி கண் விழிக்கும் வரை அருகில் அமர்ந்து பயணித்தார். அந்த பயணி உடல்நிலை சற்று தேறி கண் விழித்ததும் மற்ற பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Latest Tamil News
மயக்கமடைந்த அந்த பயணி, ஐதராபாத் சென்றதும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் மயங்கியது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்த விமான பணிப்பெண்ணுக்கு தமிழிசை பாராட்டு தெரிவித்தார். முதலுதவி சிகிச்சை அளித்த தமிழிசைக்கு பயணிகள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். தமிழிசை முதலுதவி அளித்ததை படம் பிடித்த சக பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள், தமிழிசையை பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர். தமிழிசை டாக்டருக்கு படித்தவர்.


வாசகர் கருத்து (34)

  • krishna -

    INDHA MIGA PERYA UDHAVIYILUM KURAI KANDU PIDITHU KAARUTHU PODUVAANUGA

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அருமை .காலத்தால் செய்த உதவி .

  • sankaseshan - mumbai,இந்தியா

    செய்த உதவியய் சொல்லிக்காட்டி விளம்பரம் தேடுபவர்கள் மானமிலா திருட்டு திராவிடர்கள்

  • Narayanan - chennai,இந்தியா

    தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை மோடிஜி கொடுத்திருக்கலாம் . அது தமிழிசைக்கு வந்திருந்தால் நலம் கிடைத்திருக்கும் . நீட்டை பற்றிய கவலை தீர்ந்து தமிழக மாணவர்கள் தங்கள் பணியில் சென்று இருப்பார்கள் . ஆளும் கட்சியும் நீட் பிரச்சனையில் இருந்து விலகி இருக்கும்

  • Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழிசை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கருணாநிதியின் சிபாரிசில்தான் மருத்துவம் படித்தார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்