கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் இருந்ததால் தேசிய விருது அறிவிப்புகள் தள்ளிப் போனது. 2020ம் ஆண்டில் கொரோனா தாக்கம் வந்து தியேட்டர்கள் பல மாதங்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால், வழக்கத்தை விட குறைவான படங்களே வெளிவந்தன. அவற்றோடு புதிதாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்களும் உள்ளன. இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய அறிவிப்பை டில்லியில் வெளியிட்டனர்.
5 விருதுகளை அள்ளிய சூரரைப்போற்று
சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி,பிரகாஷ் இசையமைத்தார். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் இந்த படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.
வசந்த் சாய் படத்திற்கு 3 விருது
இயக்குனர் வசந்த் சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் மொழி வாரியாக தேர்வான படங்களில் சிறந்த தமிழ் படமாக தேர்வாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு சிறந்த துணை நடிகை (லட்சுமி பிரியா) மற்றும் சிறந்த எடிட்டர் (ஸ்ரீகர் பிரசாத்)-க்கான விருதும் பெற்றது.
மண்டேலாவுக்கு 2
அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா படம் டிவியில் நேரடியாக வெளியானது. இந்த படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குனருக்கான 2 விருதுகள் கிடைத்துள்ளன.
தேசிய விருதுகள் விபரம் வருமாறு :
சிறந்த தமிழ் படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த படம் : சூரரைப்போற்று
சிறந்த நடிகர்கள் : சூர்யா (சூரரைப்போற்று) மற்றும் அஜய் தேவ்கன் (தன்ஹாஜி)
சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)
சிறந்த இயக்குனர் : சாச்சி (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த அறிமுக இயக்குனர் : மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த துணை நடிகர் : பிஜூ மேனன் (அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்)
சிறந்த துணை நடிகை : லட்சுமி பிரியா (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஜிவி பிரகாஷ் (சூரரைப்போற்று)
சிறந்த பின்னணி பாடகி : நஞ்சம்மா (அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் : ராகுல் தேஷ் பாண்டே (நீ வசந்த ராவ் - மராத்தி)
சிறந்த திரைக்கதை : சுதா கொங்கரா - ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த எடிட்டர் : ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : சுபர்தீம் போல் (அவிஜத்ரிக் - பெங்காலி)
சிறந்த இசையமைப்பாளர் : தமன் (அலவைகுந்தபுரம் - தெலுங்கு)
சிறந்த வசன அமைப்பு : மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த குழந்தைகள் படம் : சுமி (மராத்தி)
சிறந்த சுற்றுச்சூழல் படம் : தலேதந்தா (கன்னடம்)
சிறந்த சமூக படம் : பியூனரல் (மராத்தி)
சிறந்த ஒட்டுமொத்த பொழுதுபோக்கு படம் : தன்ஹாஜி (ஹிந்தி)
வாசகர் கருத்து (32)
கண் காதும் மூளையும் சரியில்லாத ஆட்கள் தான் பொய்மை நிறைந்த சூபோ படத்துக்கு விருதுகளைக் கொடுத்திருப்பார்கள்🤕. கீழ்தரம்.
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா: சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷிற்கு விருது.நல்ல செய்தி .ஆனாலும் ஒருவேளை தமிழகத்திற்கான விருதுகள் குறைவான எண்ணிக்கையிலோ அல்லது முற்றிலும் இல்லாமல் போயிருந்தால் அவ்வளவு தான் தமிழகத்தில் உள்ள போலிமதச்சார்பின்மை கூட்டங்களான திக திராவிட கருப்பு தாலிபான்கள் ,கம்யூனிஸ்ட் சிவப்பு தாலிபான்கள் ,குருமா மற்றும் சைக்கோ கூட்டங்கள் பொங்கோ பொங்கு என்று பொங்கியிருப்பார்கள் .ஒன்றிய அரசின் பாரபட்ச நடவடிக்கைகளை கண்டிக்கிறோம் .தேசிய விருதுகளில் தமிழகத்தை புறக்கணித்தது சமூக நீதிக்கு எதிரானது .திராவிட மாடல் அரசுக்கு முரணானது .மனுநீதி தர்மத்தை முன்னிறுத்தியது .சனாதன தர்ம நெறியின் பிழையானது .சமத்துவ கொள்கைகளுக்கு பாதகமானது .இது ஆரிய அரசின் அநீதி.- ஆர் ஆர் எஸ் சதி என்றெல்லாம் கண்டனங்கள் செய்திருப்பார்கள் .ஆனால் தற்போது இத்தனை விருதுகள் கிடைத்ததும் கள்ளமௌனங்களை தான் சாதிப்பார்கள் .மத்திய அரசை பாராட்ட மாட்டார்கள் .இது தான் உண்மை .இது தான் நிதர்சனம்
சூர்யாக்கு பதிலாக அஜித் அவர்களுக்கு கொடுத்து இருக்கலாம் சூரிய குடும்பம் ரசிகர்களை மதிக்கத்தெரியாத குடும்பம் அவர்கள் பக்கா தி.மு.க கட்சிக்காரர்கள் இந்தநபர் விருது வாங்கினால் கோபம் வரும் நிச்சயமாக சூரிய வாங்கமாட்டார்
இளையராசா... இப்படி விருது.... ஆனா எவ்வ்ளோ பூசிக்கொண்டு உருண்டாலும் ஓட்டுவது தான் ஓட்டும்....
தமிழ் நாட்டின் இறையாண்மை கருதி, திராவிட மக்கள் மனது புண்படாதவண்ணம் மத்திய ( ஒன்றிய ) அரசின் தேசிய விருதினை நமது நடிகர் சூர்யா அவர்கள் புறக்கணிப்பர் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன், ஒருவேளை அப்படி வாங்கி கொண்டால், அந்த தேசிய விருதினை .. அடுத்த படத்தில் ஞான வேல் உதவியுடன் மறந்து பொய் தெரியாமல் வைத்தது போன்று திரை காட்சி வைப்பர் என்றும் எதிர்பார்க்கிறேன். தேசிய விருதுக்கு ஏதும் பணம் கொடுப்பார்களா? என்று தெரியவில்லை .. கொடுத்தால் நமது ஜோதிகா அக்கா.. தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு இலவசமா வழங்குவார்கள் என்று நம்புகிறேன் . ஜெயித்த பைலட் ஒரு பிராமணர் .. ஆனால் நமது சூரிய அன்னன் தலித் இளைஞர் ஜெயித்ததாக படம் எடுத்ததும் நிச்சயம் விருது கொடுத்தது சரிதான் . சோறு அப்படி தான் திங்க வேண்டும் .