சென்னை: கள்ளக்குறிச்சியில் இறந்த மாணவியின் உடலை பிரச்சனை செய்து இதனை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என பெற்றோருக்கு அறிவுறுத்திய சென்னை ஐகோர்ட் விரைவில் மாணவியின் உடலை பெற்று கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனையடுத்து மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
கடந்த 14ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. கடந்த 18ம் தேதி, மாணவியின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பெற்றோர் முன்னிலையில், 4 மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி 19ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். ஆனால், தங்கள் தரப்பு மருத்துவரையும் பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
இருப்பினும், உயர்நீதிமன்ற உத்தரவுபடி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 19ம் தேதி 4 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் மூலம் மறு பிரேத பரிசோதனை நடந்தது. இந்த பரிசோதனையில் மாணவியின் பெற்றோர்கள் பங்கெடுக்க அனுமதித்தது. ஆனால் அவர்கள் புறக்கணித்தனர். மாணவியின் உடலையும் பெற்று செல்லாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் உடலை பெற்றுச் செல்ல உத்தரவிடக்கோரி காவல் துறை சார்பில் சென்னை ஐகோர்டில் முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது.
அப்போது, தடயவியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாவது பிரேத பரிசோதனையின் போது புதிதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என்றார்.
போலீஸ் தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரேத பரிசோதனை முறையாக நடத்தப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி சதிஷ்குமார் கூறியதாவது:
மாணவியின் மரண வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் உடலை பெற்று கொள்வதில் என்ன தாமதம் ? ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்படுத்துகிறீர்கள். மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள். உடல் மறுபிரேத பரிசோதனை உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிடவில்லை.மாணவியின் பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. இருப்பினும் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் ஆய்வு செய்ய வேண்டும். தகுதியான தடயவியல் நிபுணர்களை கொண்டு அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
உடலை பெற கெடு
சிறந்த மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. மாணவியின் மரணம் குறித்து பொய் செய்தி பரப்பப்பட்டுள்ளது. மரணத்தில் வேறு சிலர் ஆதாயம் தேடுகின்றனர். அது மனுதாரருக்கே தெரியாமல் நடந்துள்ளது. மாணவியின் இறுதிச்சடங்குகளை விரைந்து முடிக்கலாம். நாளை காலை உடலை பெற்று கொள்வீர்கள் என நம்புகிறேன். நாளை காலை 11 மணிக்குள் உடலை பெற்று கொள்ள வேண்டும். பெறாவிட்டால், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவி இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. உடலை எப்போது பெற்று கொள்வோம் என்பது குறித்து நண்பகல் 12 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
வாசகர் கருத்து (56)
பெற்றோர் தரப்பு மருத்துவரை அனுமதிக்க வேண்டியதுதானே?.
பெற்றோர்கள் தான் பிரச்சினை எப்படி வளர்ப்பது என்று தெரியாத ஜந்துக்கள்.
நீதிபதிகள் அரசியல்வாதிகள் போல் பேசுகின்றனர் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியது முற்றிலும் சரி. பெற்றோர் தரப்பு கோரிக்கை ஏன் நிராகரிக்கப்பட்டது ? உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளிக்கவேண்டும். ஒன்றுமில்லாத அரசியல் வழக்குகளை இரவோடு இரவாக விசாரிக்கும்போது பெற்றோர் வழக்கு ஏன் தொடர்பே இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டது?. மறுபடியும் முதலெந்து என்று இந்த வழக்கு நீடிக்கும்.
நீதிபதி தெரிந்துகொண்டார் நடக்கும் குட்டையாடடத்தை , பெற்றோர்கள் பணத்துக்கும் ஒரு நல்ல அரசு வேலைக்கும் அடிபோடுகிறார்கள் . நான் நினைக்கிறன் பள்ளி மீது தவறு இல்லை போராட்ட்த்தை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகிகள் கைது - இது தவறு , இறப்புக்கு உண்மையான காரணம் தெரியணும் .
இப்போது வரை இது தற்கொலையா கொலையா என்று விவரம் தெரியவில்லை. 10 நாட்களாகியும் விசாரணை செய்து உண்மையைவெளியிட முடியாமல் இருக்கும் போது பெற்றோரின் மன நிலை எப்படி இருக்கும் என்று ஒரு மனிதராக நீதிபதிக்கு புரியாதா. விசாரணை சரியில்லை என்பதுதான் உண்மை. இங்கு சில உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கும் என்று தோன்றுகிறது.