பழனிசாமி இன்று டில்லி பயணம்: மோடி, அமித் ஷாவை சந்திக்க திட்டம்
சென்னை-அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலராக பொறுப்பேற்ற பின், பிரதமர் உள்ளிட்டோரை சந்திக்கும் திட்டத்துடன், பழனிசாமி இன்று புதுடில்லி செல்கிறார்.
அதிலும் பங்கேற்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். புதுடில்லியில் தங்கிஇருக்கும் நாட்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, பன்னீர்செல்வம் மருத்துவமனையில் உள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், அவர் தற்போது புதுடில்லி வர இயலாத சூழல் உள்ளது.பிரதமர் மோடி, 'செஸ் ஒலிம்பியாட்' துவக்க விழாவில் பங்கேற்க, வரும் 28ம் தேதி சென்னை வர உள்ளார்.
அப்போது, அவரை சந்திக்க பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு உள்ளார். அதற்கு முன்பாக பிரதமரை சந்தித்து, கட்சியின் தற்போதைய நிலையை விளக்கி, பன்னீர்செல்வத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துரைக்க உள்ளார் பழனிசாமி. மேலும், தன் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் நடத்தும் சோதனை தொடர்பாகவும் பேச, பழனிசாமி புதுடில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிக்கு, பன்னீர்செல்வம் சென்றிருந்தார். புதுடில்லியில், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்.இன்று, தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு, மத்திய அரசு சார்பில், பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்பதற்காக, பழனிசாமி, இன்று காலை 10:00 மணி விமானத்தில் புதுடில்லி செல்கிறார்.நாளை மாலையில், அசோகா ஹோட்டலில் நடக்கும் ஜனாதிபதி பிரிவு உபசார விழாவில் பங்கேற்கிறார். வரும் 25ல், புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா நடக்க உள்ளது.
அதிலும் பங்கேற்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். புதுடில்லியில் தங்கிஇருக்கும் நாட்களில், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, பன்னீர்செல்வம் மருத்துவமனையில் உள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், அவர் தற்போது புதுடில்லி வர இயலாத சூழல் உள்ளது.பிரதமர் மோடி, 'செஸ் ஒலிம்பியாட்' துவக்க விழாவில் பங்கேற்க, வரும் 28ம் தேதி சென்னை வர உள்ளார்.

அப்போது, அவரை சந்திக்க பன்னீர்செல்வம் அனுமதி கேட்டு உள்ளார். அதற்கு முன்பாக பிரதமரை சந்தித்து, கட்சியின் தற்போதைய நிலையை விளக்கி, பன்னீர்செல்வத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துரைக்க உள்ளார் பழனிசாமி. மேலும், தன் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித் துறையினர் நடத்தும் சோதனை தொடர்பாகவும் பேச, பழனிசாமி புதுடில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (24)
திமுக ஆட்சி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறது.அதற்கு அதுவே காரணம்,ஆட்சி கலைக்க பட வேண்டும் என்பார் எடப்பாடி.
ஒற்றைத் தலைமை என்றால் அது பிஜேபிதானுங்க ......
மோடியின் கைக்கூலிகள், ஜெயலலிதா மாதிரி கட்சியை வழிநடத்த வேண்டும் அதை விட்டுட்டு எதெற்கெடுத்தாலும் மோடியை சந்திக்க செல்வது என்னதான் நடக்கிறது... இதற்க்கு அதிமுகவை பிஜேபி என்று மாற்றிக் கொள்ளலாம், எப்படி இரட்டை தலைமை ஒற்றையாக மாறியதோ அதே மாதிரி இரட்டை கட்சி ஒற்றை கட்சியாக மாறிவிடும்.
ஈவேராவுக்கு பாரதரத்னா என்கிற அதிமுகவின் புதிய தீர்மானத்தை சும்மா லுல்லாயிக்கு தான் போட்டோம்னு சொல்லிட்டு வாங்க. உங்க கட்சி விளங்கும். இல்லீன்னா ஓபிஎஸ் மாதிரி உஉ...ஊஊ.. தான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஏதும் பிரச்சனையா?