Load Image
Advertisement

ஆக்கிரமிப்பாளர் பிடியில் 1,202 ஏக்கர்: கண்டுகொள்ளாத மலை மாவட்ட அதிகாரிகள்

பந்தலுார்: கூடலுார் வருவாய் கோட்டம், பந்தலுார் தாலுகாவில், 1,202 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள நிலையில், அவற்றை கையகப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.

Latest Tamil News


நீலகிரி மாவட்டம், பந்தலுார் தாலுகாவில், நெல்லியாளம், சேரங்கோடு, நெலாக்கோட்டை மற்றும் மூனநாடு ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கிராம மேய்ச்சல் நிலங்கள், அனாதீனம் ஆகிய பிரிவுகளின் கீழ், அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அதில், அனாதீன நிலம் மட்டும் 1,202 ஏக்கர், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.

இந்த நிலங்களை கையகப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன், தி.மு.க., ஆட்சியில் ஆய்வு செய்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தற்போது மீண்டும், அதே கட்சியினரின் ஆதரவுடன், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சிக்கியுள்ளது. அதில், சில இடங்களில் உள்ள அனாதீன நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Tamil News

இதை தவிர, கூடலுார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், பட்டா இல்லாத இடங்களில், பலருக்கு பசுமை வீடுகளும் கட்டிதரப்பட்டு, மின் இணைப்பும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள், உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கூடலுார் ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் கூறுகையில், ''அப்பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில், கோர்ட் வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை தவிர, மீதமுள்ள நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கை நடந்து வருகிறது. விரைவில் அங்கு அறிவிப்பு வைக்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து (7)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். அப்படி என்றால் அந்த அதிகாரிகளும் நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்திருக்க வாய்ப்புண்டு.

  • Emperor SR - Ooty,இந்தியா

    ஓஹோ, பத்து வருஷத்துக்கு முன்னாடி அறிவிப்பு பலகை வெச்சது திமுக ஆட்சியிலா? அப்போ சந்தேகமே வேண்டாம். யாரு ஆக்ரமிப்பு செஞ்சிருப்பாங்க அதே திமுக குண்டர்கள் தான். அதான் மறுபடியும் மடியில் அரசு வந்துருச்சே.. இனி ஹெக்டேர் கணக்குல தான் ஆகரமிப்பாங்க

  • Nagarajan - VA,இந்தியா

    MR அண்ணாமலை கவனிக்கவும். அடுத்த தேர்தலுக்கு பயன் படும்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அமைச்சர்கள் எம் எல் ஏக்கள் 'புறம்போக்கு' நிலங்கள் எத்தனை தொகுதியில் உள்ளது என்றுதானே முதலில் கேட்கிறார்கள் அதிகாரிகளும் சிண்டிகேட் போட்டுக்கொண்டு விழுங்குகிறார்கள். நாட்டை சூறையாடுவதில் போட்டா போட்டி

  • நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா

    எப்பத்தாண்டா திருந்துவீங்க?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்