Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் 20 இடங்களில்...சல்லடை!

Tamil News
ADVERTISEMENT
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் நடப்பது தொடர்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர் உட்பட, தமிழகத்தின் 22 இடங்களில், நேற்று மத்திய புலனாய்வு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். சல்லடை போட்டு நடத்திய தேடுதல் வேட்டையில், போதைப் பொருள் கடத்தலில், பாக்., பயங்கரவாதிகள் மற்றும் இலங்கை விடுதலை புலிகளின் கைவரிசையை உறுதி செய்வதற்கான ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து லட்சத்தீவு வழியாக, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹெராயின்' உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் நடப்பதாக, கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

பயங்கரவாத சக்திகள்



இதன் பின்னணியில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் பயங்கரவாத சக்திகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.இதனால், கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். ஹெலிகாப்டர் உதவியுடன், வான் வழியாகவும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'ரேடார்' கருவி வாயிலாக, சந்தேக படகுகளை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில், 2021ல், கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கடற்பகுதியில், மூன்று படகுகளை சுற்றி வளைத்து பிடித்தனர். அவற்றில் தண்ணீர் தொட்டி போல, ரகசிய அறைகள் இருந்தன. அவற்றின் மேல் மீன்பிடி வலைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த படகுகள், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை என தெரியவந்தது.படகுகளில் இருந்த ரகசிய அறைகளில், 301 பாக்கெட்டுகளில், 300 கிலோ ஹெராயின் இருந்தது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். பாக்கெட்டுகளின் மேல் 'பறக்கும் குதிரை' படம் அச்சிடப்பட்டு இருந்தது. போதை பொருள் கடத்தல் தொழிலில், இது போன்ற குறியீடு பின்பற்றப்படுவது நடைமுறை.

துப்பாக்கிகள்



மேலும், அந்த படகு களில், 'ஏகே 47' ரக துப்பாக்கிகள் ஐந்து; 9 எம்.எம்., ரக துப்பாக்களில் பயன்படுத்தும் 1,000 தோட்டாக்கள் மற்றும் வெடி மருந்துகளும் இருந்தன. இவற்றுடன், இலங்கையைச் சேர்ந்த ஆறு பேரை, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஈரான் நாட்டின் துறைமுகத்தில் இருந்து, கேரளா வழியாக, இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். போதை பொருள் மற்றும் ஆயுதங்கள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் பின்னணியில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில், பாக்., பயங்கரவாதிகள் உதவியுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் புதுப்பிக்க, போதை பொருள் கடத்தல் மற்றும் ஆயுத கடத்தல்கள் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கான வேலைகள், தமிழகத்தில் இருந்து செய்யப்பட்டுள்ளன.


இதையடுத்து, 2021 அக்டோபரில், தமிழகம், கேரளாவில் ஒன்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில், புலனாய்வு அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, சென்னை வளசரவாக்கத்தில், முரளி கிருஷ்ணா தாஜ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் பதுங்கி இருந்த, சற்குணம் என்ற சபேசன், 47, என்பவரை பிடித்து விசாரித்தனர். இவரது அறையில், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான புத்தகங்கள், போர் தந்திரம் தொடர்பான ஆவணங்கள் சிக்கின. 'ஸ்மார்ட் போன், சிம் கார்டு'கள் மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட 'டிஜிட்டல்' ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர் விசாரணையில், இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில், உளவுப் பிரிவு நிர்வாகியாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவருடன், மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

25 இடங்களில் 'ரெய்டு'



இந்நிலையில், போதை பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் தொடர்பாக, சென்னையில், மண்ணடி, பல்லாவரம், குரோம்பேட்டை என ஒன்பது இடங்கள் மற்றும் செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர் என மாநிலம் முழுதும் 22 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று காலை, 6:30 மணியில் இருந்து மாலை 6:30 வரை, சல்லடை போட்டு தேடும் விதமாக, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், 57 மொபைல் போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென் டிரைவ், 2 லேப்டாப், 8 வைபை மோடம், இலங்கை பாஸ்போர்ட், பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த வடப்பட்டினம் கிராமத்தில், இலங்கை அகதிக்கு சொந்தமான குணசேகரன் என்பவரது வீட்டில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து தப்பி, சட்ட விரோதமாக வடப்பட்டினத்தில் தஞ்சமடைந்த குணசேகரன், 2015ல், அவரது மகன் திலீப் பெயரில் பங்களா வாங்கி, வசித்து வந்தார்.இதையறிந்த, காஞ்சிபுரம் மாவட்ட 'கியூ' பிரிவு போலீசார், 2021 ஜனவரியில் குணசேகரன், மகன் திலீப்பை கைது செய்தனர். தற்போது அவர்கள், திருச்சி முகாமில் உள்ளனர்.



13 மணி நேரம் சோதனை!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட நபர்கள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் போதை பொருள் கடத்தல், 'ஆன்லைன்' பண மோசடி, போலி பாஸ்போர்ட் போன்ற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள்.நிலுவை வழக்கில் ஜாமின் பெற்று அல்லது வழக்கில் விடுவிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தாயகம் திரும்பும் வரை, இம்முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பர். இவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இவர்களுக்கு பண்ணை வீடுகள், 'லம்போக்னி' கார்கள் இருப்பதாக, 'கியூ பிரிவு' போலீசார் கூறுகின்றனர். இந்த சிறப்பு முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்க, போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று 13 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இங்கு தங்கியுள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. - நமது நிருபர் குழு -



வாசகர் கருத்து (21)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

    இந்த விடியல் ஆட்சி ஒன்றும் செய்யாது.... அபாய கட்டத்தில் தமிழகம்..... எனவே மத்திய அரசு அதிகாரிகள் உளவுத்துறை மூலம் மிகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.....

  • Siva Kumar -

    போதை கும்பல். இப்போதுதான் களை எடுக்கப்பட்டு வருகிறது.

  • DVRR - Kolkata,இந்தியா

    திருட்டு திராவிட மடியல் அரசு ஆட்சியில் இது நடப்பது சகஜம் தானே இது அவர்கள் பிறப்புரிமை இதை அவர்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    பல்லாயிரம் கோடிகளின் மதிப்பில் போதை பொருள் வந்த கண்டைனரை பற்றி NIA விசாரித்ததா? வந்த பாதையை திறந்து விட்டு வைத்திருப்பவனை பிடித்தால் முழுவதும் கட்டுக்குள் வந்து விடும்மா?

  • மதுமிதா -

    டாஸ்மாக் போல் அங்கீகாரம் ஆகி விடக் கூடாது இப்போதே மாணவர்கள் நிலை மோசம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement