ADVERTISEMENT
புதுடில்லி: தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டின் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதன்பின்னர், கோசனோவ் நினைவு தடகளப் போட்டியில் 200மீ ஓட்டத்தில் 22.89 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவர் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தேர்வானார்.

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில், தனலட்சுமி சோதனையில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல், கர்நாடகாவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார்.
வாசகர் கருத்து (10)
,,,,
இதுபோன்ற குறுக்குவழிகளை நீக்குவதற்கு, பதக்கப் பட்டியலில் பின்தங்கிய நாடுகளுக்கு 69 சதவீத பதக்க ஒதுக்கீடு செய்ய ஸ்டாலின் ஏற்பாடு செய்யவேண்டும். அல்லது அம்பேத்கர் போன்ற சிந்தனையுள்ள ஒருவரை சர்வதேச விளையாட்டு கழகங்களில் பதவியில் அமர்த்த வேண்டும்.
நீ முதன் முதலாக பதகத்தோட சென்ற இட ராசி அப்பிடி. ஷு வாங்கிறதறலை செருப்பு வாங்கித்தரலை என்று அலப்பறை வேறு ?.
ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் உட்கொள்வதினால் கூட இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் இந்திய வீரர்கள் தவறு செய்ய வாய்ப்பே இல்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அலர்ஜி.அல்லது வலி நிவாரண மருந்துகளை சில நாட்களுக்குமுன் பயன்படுத்தியிருக்கலாம். அதுகூட போதை மருந்து உட்ட கொண்ட அதே டெஸ்ட் முடிவைக் காட்டும். மீண்டும்🤔 சோதனை செய்யக் கேட்கலாம்.