ADVERTISEMENT
சென்னை: சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டு, ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.
தமிழக சட்டசபையில் 66 எம்எல்ஏ.,க்களுடன் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கின்றனர். இதற்கிடையே கட்சியில் ஏற்பட்ட பிரச்னையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். இதனையடுத்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியையும் பறிக்க பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றுவது தொடர்பாகவும், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய மூவரும் அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாகவும் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி இன்று (ஜூலை 19) சபாநாயகர் அலுவலகத்திற்கு சென்று அப்பாவுவிடம் கடிதம் வழங்கியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் சட்டசபை துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து பழனிசாமி உத்தரவிட்டார். அதேபோல், சட்டசபை அதிமுக துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து (13)
பதவி வெறி,பண வெறி பிடித்து நிற்கிறான்
ஜெயலலிதா இறந்த நேரத்தில் மூச்சுக்கு முந்நூறு தடவை சின்னம்மா தான் அடுத்த பொதுச்செயலாளர், சின்னம்மா தான் அடுத்த முதல்வர் என்று கதறி கொண்டிருந்தவர் இந்த , உதயகுமார்...ஊழல் செய்வதில் படுகில்லாடி....எந்தப்பக்கம் பசை உள்ளதோ அந்த பக்கம் ஒட்டிக்கொள்ளும் கருங்காலி.. சீன் போடுவதில் இவரை மிஞ்ச ஆள் கிடையாது.
தமிழ்நாட்டோட சாபக்கேடு, இவனெல்லாம் மந்திரி எதிர்கட்சி துணைத்தலைவர் .
Sabash. Another koothapakkam slave gets the post. We thought udyakumar is gentleman till we heard his interview against OPS. His win is not glorious. Just managed.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஊர்ந்து வந்தவன் ஜெயா ஏற்படுத்தி வைத்துவிட்டு போன நிரந்தர பொதுச்செயலாளர் என்ற பதவியை நீக்கிவிட்டு தானே அதில் உட்கார்ந்துகொள்ள துடிக்கிறான். பதவி வெறி பிடித்து திரிகிறான்...