சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு வரவேற்பு

இவரை வரவேற்க பா.ஜ., எம்எல்ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன் , வானதி சீனிவாசன், சென்னை மற்றும் இதனையொட்டியுள்ள பா.ஜ., மாவட்ட செயலாளர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, கங்கை அமரன், மற்றும் இசை சங்கத்தினர் திரளாக வந்திருந்னர்.

கூடுதல் பாதுகாப்பு
இளையராஜாவுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர். எம்.பி., பதவி மற்றும் அவரது மோடி குறித்த விமர்சனம் கடும் சர்ச்சைக்குள்ளானது. இதனால் பாதுகாப்பு கூடுதலாக வழங்க போலீசார் முடிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வாசகர் கருத்து (32)
இளையராஜா அவர்கள் பண்புடன் இந்த பதவியை மறுத்திருந்தால் அவர் சமீபத்தில் இழந்த புகழை ஓரளவுக்கு மீட்டிருப்பார். மாறாக அவ்வாறு நடக்காமல் தானும் ஒரு சராசரி மனிதர் என்பதை நிரூபித்து விட்டார்...இனிமேலும் இவர் இசையால் மட்டுமே பேச வேண்டும், மேற்கொண்டு சாமரம் வீசி இருக்கும் பெயரையும் கெடுத்து கொள்ளாமல் இருக்க கடவுள் அருள வேண்டும்..வாழ்க இசைஞானி இசை....
too much work to police
துதிபாடுவது மட்டுமல்லாமல் ஒரு குடும்ப கொத்தடிமையாகவும் இருந்து திராவிட மாடல் அரசிடம் பட்டமும் பதவியும் பெற்றவர்கள் லியோனி, சுபவீ, ஜெயரஞ்சன் மற்றும் கவிப்பேரரசு அவர்கள். இவர்கள் எல்லோரையும் விட தன்னுடைய சொந்த திறமையால் மட்டுமே பதவியை பெற்றவர் திரு இளையராஜா அவர்கள். திரு இளையராஜா அவர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்து தமிழக மக்களை மகிழ்வித்தார். இன்னமும் மகிழ்வித்துக்கொண்டிருக்கிறார். இளைய ராஜாவை தவறாக விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள்
உண்மையில் அம்பேத்கர் எனும் சமுதாய சிற்பியுடன் பிரதமர் மோடி அவர்களை ஒப்பிட சிறந்த சிந்தனை வேண்டும்.
அப்துல் கலாமை ஆதரிக்காதவர்கள் , இளைய ராஜாவுக்கு மதிப்பு அளிக்காதவர்கள் , தமிழக ஆளும் கட்சியினர். மற்றவர்கள் ராஜாவுக்கு மரியாதை செய்தால், இவர்கள் இகலுகிறார்கள்.