சென்னை : ஆங்கிலேயர்களின் குரலாக தி.மு.க., பேசி வருவதாக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:வேலுாரிலும், மதுரையிலும் பேசிய கவர்னர் ரவி, 'திராவிடம் என்பது நிலப்பரப்பு. திராவிடத்தை இனவாதமாக ஆங்கிலேயர்கள் தான் முதன்முதலில் குறிப்பிட்டனர்.
அது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி' என்று, வரலாற்று உண்மையை உடைத்திருக்கிறார்.அதற்கு தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, 'திராவிடம் என்பது இனத்தை தான் குறிக்கிறது. ஆரியர்கள் தான் பிரிவினையை விதைத்தனர்' எனக் கூறியிருக்கிறார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும், ஆங்கிலேயர்களின் குரலாக ஒலிக்க, ஒரு கட்சி இருக்கிறது என்பதற்கு, அவரது அறிக்கையே சாட்சி.இந்திய விடுதலைப் போராட்டம், 1900-ம் ஆண்டுகளின் துவக்கத்தில் பெரும் வேகம் பெற்றது.

தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வ.வே.சு.அய்யர் போன்ற தலைவர்கள், இளைஞர்கள் மனதில் மூட்டிய சுதந்திரத் தீ, ஆங்கிலேயர்களை அச்சமூட்டியது.அடக்க முடியாமல் தவித்த ஆங்கிலேயர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டனர். அதன் விளைவாக தோன்றிய நீதி கட்சி தான், திராவிடர் கழகமாகி, பின்னாளில் தி.மு.க.,வானது. திராவிட இனவாதம் மட்டுமல்ல, தி.மு.க., என்ற கட்சியே ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவாக உருவானது தான். நீதி கட்சியின் தோற்றம் என்பதே, வங்கப் பிரிவினை போன்றதொரு ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி தான்.
வெளிப்படையாக தனி நாடு கேட்டால், பிரிவினைவாதம் பேசினால், தி.மு.க., என்ற கட்சியே இருக்காது.கட்சி இல்லை என்றால் ஆட்சியும் இருக்காது. இதுவெல்லாம் தி.மு.க.,வுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் 'மாநில சுயாட்சி, மாநில உரிமை' என்ற போர்வையை போர்த்தி, அவ்வப்போது பிரிவினைவாதம் பேசுகின்றனர். அவர்களின் நோக்கம் இளைஞர்களின் மனதில் பிரிவினை என்ற நஞ்சை விதைப்பது தான். இதை புரிந்து தான், கவர்னர் உண்மையை பேசி வருகிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (52)
வா வூசிக்கு ஆயுள் தண்டனை அளித்த ஆஷ் என்ற கொடூரனுக்கு வா உ சி சாலையிலேயே மணி மண்டபம் உள்ளது தூத்துக்குடியில் இந்த அக்கிரம இந்த திராவிட கும்பல் ஆட்சியில் மட்டும் தான் நடக்கும் ...அவனை கொடூரமாக கொன்றவர் ப்ராமண தேசிய வீரர்
ஆங்கிலேயர்கள் மட்டும்தான் பிர்த்தாலும் சூழ்ச்சியை செய்தார்களா அல்லது அவர்களது வழியில் திமுக மட்டும்தான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்துகொண்டு உள்ளதா.. ஆட்சி அதிகாரத்தை எப்படியாவது பிடிக்கவேண்டும் ஒரே கொள்கை உடைய எந்த ஒரு அரசியல் கட்சியும் பிரித்தாலும் சூழ்ச்சியை வைத்துக்கொண்டுதால் உள்ளது. மேலோட்டமாக பார்த்தால், அரசியல் சட்டம் சமூகத்தில் இருக்கும் பொருளாதார பின்னணியை கொண்ட சமூக அடிப்படையில் பிரித்தது அரசியல் அமைப்புச் சட்டம். SC/ ST, Backward Classes, Forward Classes என்று. அப்போதைய காலத்தில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்த சாதியினர் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக, முன்னேறியவர்களாக இருந்தார்கள் என்பதன் அடிப்படையிலேயே பிரிவுகளை ஏற்படுத்தினார்கள். அதன் அடிப்படையில் அரசுத் துறைகளில் அனைத்து பிரிவினரும் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள். வாழ்கையில் முன்னேற்றமும் அவர்களுக்குக் கிடைத்தது. அதற்க்குக் காரணம் அப்போதைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி கொடுத்த கல்விக் கொள்கைதான். கல்வியும், அரசு வேலை வாய்ப்பும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. விளைவு, அதிகாரத்தில் இருந்தவர்கள், அடுத்தவர்கள் மீது அதிகாரம் செலுத்தியே பழக்கப்பட்டவர்களுக்கு மனதளவில் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. அதுமட்டுமல்ல.... SC / ST / BC / FC பிரிவுகளுக்கு உள்ளேயே வெறுப்பு உணவர்வு உருவாகிப்போனது. அதை வைத்து இப்போதைய அரசியல் விளையாட்டு நடந்துகொண்டு இருக்கிறது. ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேற்றினாலும்.... சாதி உயர்வு தாழ்வு பார்க்கும் எண்ணத்தை மனதிலிருந்து வெளியேற்றும் எண்ணம் உள்ளவர்களாகவே இருப்பது வருத்தமானது. எனவே இன்றய அரசியல் களத்தில் பிரித்தாலும் சூழ்ச்சி திமுக என்று மட்டுமே இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் அந்த நிலைப்பாட்டில் மட்டுமே அரசியல் செய்துகொண்டு இருக்கின்றன. வேட்பாளர்களின் தேர்வுகளே அதை வெளிப்படையாகச் சொல்லும். சாதி அமைப்பு என்ற ஒன்று இருக்கும்வரை, பிரித்துப் பார்த்து அரசியல் நிலை இருக்கவே இருக்கும். அதைச் சூழ்ச்சி என்று சொல்லிக்கொள்ளலாம்.
கவர்னர் ரவிக்கு இருக்கும் புரிதல் முன்னாள் கவர்னர் போகிறது இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.
தமக்கு கீழிருக்கும் அடிமைகள் எங்கே புரட்சி செய்துவிடுவார்களோ என்கிற பயத்தில் ஜமீன்தார்கள் நல்லவர்கள் போல தங்களை சித்தரித்துக்கொண்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்க செய்த சூழ்ச்சியே நீதி கட்சி என்பது.. ஆங்கில அடிவருடிகள்... அவர்களுக்கு எளிதாக மக்களை ஏமாற்றக்கிடைத்த ஆயுதமே தீண்டாமை என்னுந் ஒரு மாயப்பேய்.. இல்லாத ஒன்றை பூதாகாரமாக்கி அதைவைத்து தங்களிடம் மக்கள் எப்போது நிரந்தர அடிமைகளாக இருக்க வழி செய்துகொண்டார்கள் இந்த ஜமீன்தார் ஏமாற்றுப்பேர்வழிகள்.. அவர்களில் ஒருவரே டக்ளசின் தாத்தாவும் கூட..
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அப்பாடா.... எவ்ளோ நாள்தான் காங்கிரஸ்மேலேயே பழி போடுறது. இனிமேல் பிரிட்டிஷ்காரன்ல ஆரம்பிச்சு முகலாயர், கில்ஜி வம்சம், லோடி வம்சம்னு போய் கடைசியா கிமு ல வாழ்ந்த அசோகர் வரைக்கும் இழுக்க வேண்டியதுதான்.முடிஞ்சா அதுக்கும்மேல போகவேண்டியதுதான்.