ADVERTISEMENT
சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 18) டிஸ்சார்ஜ் ஆனார்.
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 12ம் தேதி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து உடற்சோர்வு இருந்ததால், கடந்த 14ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முழுவதும் குணமடைந்த முதல்வர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வார காலத்திற்கு அவர் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு நேராக தலைமை செயலகம் சென்று ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்தார். அதன்பின்னர் தன் இல்லத்திற்கு திரும்புகிறார்.
வாசகர் கருத்து (18)
12ந்தேதி கொரோன 14ந்தேதி மருத்துவமனையில் அனுமதி???17ந்தேதி வெளியே வருதல்???இதெல்லாம் என்ன சினிமாவா சீரியலா இல்லே ட்ராமாவா????ஏன்னா நடிப்புடா சாமி
அரசியலில் இருந்து ஓய்வெடுக்க? அப்ப சின்னவர் தானே முதல்வர்?
செந்தில் பாலாஜியை முதல்வராக்கிவிட்டு நாலு வருஷம் ஓய்வு எடுங்கள்...
வேலையும் இல்லை நிற்க நேரமும் இல்லை அதனால ஓய்வூ தேவை>
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கொரோனா பாதித்தால் 10-14 நாட்களுக்கு உடலில் வைரஸ் பாசிட்டிவ் நிலை தான் காமிக்கும் அதுவரைக்கும் கொரோனா பாதித்தோர் ஓய்வில் இருந்து சிறு சிறு பணிகளை மட்டும் செய்வது தான் உடலுக்கு நல்லது..5 நாட்களுக்கு மேல் தடுப்பூசி போட்டவர்களாக இருந்தால் கொரோனா வேறுறொருவருக்கு பரவாது முதல் மூன்று நாட்களுக்கு தான் இதற்கு பரவுதல் தன்மை அதிகம் அதே நேரம் கொரோனா ஒரு முறை வந்தவர்களுக்கு 3-60 மாதங்களுக்கு இதன் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கணிக்கிறார்கள், ஒரு வேளை கொரோனா திரும்ப திரும்ப வந்தாலும் அதன் பாதிப்பு மிக குறைவாக தான் இருக்கும் எனவும் கணிக்கிறார்கள்...